Breaking News

அரை மணிநேரத்தில் குணமாகும் சர்க்கரை நோய்.. வியக்க வைத்த சீனா! வரப்பிரசாதமாகும் புது சிகிச்சை:

 


நீரிழிவு எனும் சர்க்கரை நோயை அரை மணிநேரத்தில் குணப்படுத்தும் சிகிச்சை முறையை சீனா டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடும் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, மாத்திரை எடுத்து கொள்ளும் சூழலில் இந்த அரை மணிநேர சிகிச்சை முறையில் முழுவதுமாக அந்த நோய் குணமாகிவிடும் என கூறப்படுவதால் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

தற்போது நீரிழிவு எனும் சர்க்கரை நோயால் மொத்த உலகமே பாதிக்கப்பட்டு வருகிறது. நம் நாடு உள்பட பல நாடுகளில் ஏராளமானவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தும் சிகிச்சை முறை என்பது கண்டறியப்படவில்லை.

மாறாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் வகையிலான மருந்து, மாத்திரைகள் தான் உள்ளன. ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு இன்சுலின் ஊசி மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மாத்திரை, மருந்துகளை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் என்பதோடு, கடும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். இதனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு பிடித்த உணவை கூட சாப்பிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீனாவில் இருந்து குட்நியூஸ் வந்துள்ளது.

அதாவது வெறும் அரை மணிநேர அறுவை சிகிச்சையை செய்வதன் மூலம் சர்க்கரை நோயில் இருந்து முழுவதுமாக குணமாகி விட முடியும் ? என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இதனை சீனா தற்போது வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது. அதாவது சீனாவில் 25 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த பெண் 2 முறை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர் என்பதால் சர்க்கரை நோய் அவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.

இதற்காக அவர் இன்சுலின் ஊசியை பயன்படுத்தி வந்தார். ஆனாலும் கூட அவர் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடவில்லை. இத்தகைய சூழலில் தான் அவருக்கு திசு அறுவை சிகிச்சை செய்து சர்க்கரை நோய் முழுவதுமாக குணப்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சீனாவின் ஷாங்காய் நகரில் வெளிவரும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனாவை பொறுத்தமட்டில் சர்க்கரை நோயால் 140 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய் அதிகரிப்பு விகிதம் என்பது 12 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. இதனால் சர்க்கரை நோயில் இருந்து பொதுமக்களை குணப்படுத்தும் வகையிலான சிகிச்சை முறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் அங்கு தொடங்கின. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக தான் தற்போது கணைய திசு மாற்று அறுவை சிகிச்சை மூலம் சர்க்கரை நோய் குணப்படுத்தலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை முறையை சீனாவில் உள்ள தியான்ஜின் பர்ஸ்ட் சென்ட்ரல் மருத்துவமனை மற்றும் பீக்கிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். அதன்படி 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணின் கணைய பகுதியில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திசுக்களில் சிறிய அளவை வெளியே எடுத்து அதனுடன் ரசாயன மூலக்கூறை சேர்க்கின்றனர். இதன்மூலம் அந்த திசு pluripotent stem cells- ஆக மாறுகிறது.அதன்பிறகு இந்த செல்கள் ஐலெட் செல்களாக மாற்றப்பட்டு நோயாளியின் கணைய பகுதியில் மீண்டும் வைக்கப்படுகிறது.

இது கணைய பகுதியில் சுரக்கும் இன்சுலினை முடக்கிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து இயல்பு நிலைக்கு நோயாளிகளை கொண்டு வருகிறது. இருப்பினும் கூட அறுவை சிகிச்சைக்கு பிறகும் நோயாளிகள் சிறிது காலம் டாக்டர்கள் அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டும். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு 25 வயது பெண் எடுத்து கொள்ளும் இன்சுலின் ஊசியின் அளவை முதலில் குறைத்தார். தற்போது அவரது சர்க்கரை நோயில் இருந்து மெல்ல மெல்ல தேறி பூரண குணமடைவதை நோக்கி செல்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் சர்க்கரை நோயில் இருந்து முழுவதுமாக விடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிகிச்சைக்கு வெறும் அரை மணிநேரம் மட்டுமே போதும். இதன்மூலம் சர்க்கரை நோயை முற்றிலுமாகஇந்த அறுவை சிகிச்சை என்பது டைப் 1 வகை சர்க்கரை நோயாளிக்கானது என்பததோடு சர்க்கரை நோய் குணமாக நாள்பட்ட மருந்து, உணவு கட்டுப்பாடு இனி தேவை இருக்காது என்று கூறப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சீன டாக்டர்களின் இந்த அறுவை சிகிச்சை முறை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

No comments