Breaking News

இந்தியா; எந்த மாநிலத்தில் சூரியன் முதலில் உதிக்கும் தெரியுமா? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல் இதோ!

 

இந்தியாவை பொறுத்தவரை எந்த மாநிலத்தில், குறிப்பாக எந்த இடத்தில் முதலில் சூரியன் உதிக்கும் தெரியுமா.

அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

இந்த உலகத்தை பொறுத்தவரை அறிவியல் எவ்வளவோ பெரிய உச்சங்களை தொட்டு இருந்தாலும், இன்னும் விடை தெரியாத பல அதிசயங்கள் நம்மைச் சுற்றி வளம் வந்து கொண்டு தான் இருக்கிறது. வான்வழியை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது ஆழமான கடல்களை எடுத்துக் கொண்டாலும் சரி, இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட அதில் உள்ள மர்மங்களின் 20% கூட இன்னும் மனிதனால் இனம் காண முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நாம் வாழும் இந்த பூமியின் சுற்றளவு என்ன, மேலிருக்கும் வானத்துக்கும் நாம் வசிக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் என்ன, கடல் மட்டம், உயரமான மலைச் சிகரங்கள் என பல புவியியல் ஆய்வுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடந்த நூறு ஆண்டுகளாகவே நடந்து வருகின்றனர். ஆனால் இது போன்ற தகவல்கள் நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமானவை என்பதால், சில நேரங்களில் அரசு தேர்வுகள் அல்லது போட்டித் தேர்வுகளில் இதுபோன்ற கேள்விகளை நாம் அடிக்கடி எதிர்கொள்கிறோம்.

அப்படி ஒரு கேள்வி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆச்சரியமூட்டும் கேள்வி என்னவென்றால், இந்தியாவின் எந்த மாநிலத்தில் சூரியன் முதலில் உதிக்கின்றது? என்பது தான். உண்மையில் பலருக்கு இதற்கான விடை தெரியவில்லை. சரி இந்த கேள்விக்கான சரியான பதில் என்ன தெரியுமா?

பூமியின் வேகம் மற்றும் இரவும், பகலும் மாறுவதற்கான அறிவியல் காரணத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இந்த அறிவியல் விதிப்படி, ஒரே நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் சூரிய உதயமும், அஸ்தமனமும் நிகழாது என்பதை நம்மில் பலர் நினைத்து பார்ப்பதில்லை. ஆம், நாம் இந்தியாவில் வசிக்கிறோம் என்றாலும், நாம் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப சூரியன் உதிக்கும் மற்றும் அஸ்தமனமாகும் நேரம் வித்தியாசப்படும்.

சரி நாம் அனைவரும் ஒரே நாட்டில் இருந்தாலும், மற்ற எல்லா மாநிலங்களுக்கும் முன்பாக சூரிய உதயம் நடக்கும் இந்தியாவின் ஒரே மாநிலம் எது தெரியுமா? அது தான் அருணாச்சல பிரதேசம். அதிலும் குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில் தான் முதல் சூரிய உதயம் காணப்படுகிறது. இந்த நகரம் "இந்தியாவின் ஜப்பான்" என்று அழைக்கப்படுகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்த அஞ்சாவ் மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் ஆறுகள் மற்றும் மலைகளால் இடத்தில் உள்ளது. அங்குள்ள இந்த டோங் கிராமத்தில் தான் முதல் முதலில் சூரியன் உதிக்கிறது. இது சீனா மற்றும் மியான்மர் எல்லைக்கு இடையே அமைந்துள்ளது. பிரம்மபுத்திராவின் துணை நதியான லோஹித் சங்கமிக்கும் இடமான இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்த டோங் கிராமத்தில், நாட்டில் உள்ள மற்ற கிராமங்களை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதிக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். அதேபோல், இந்த கிராமத்தில் சூரியன் ஒரு மணி நேரம் முன்னதாகவே மறைகிறது. இதுவே இந்த பகுதி சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமான ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இது உலக வரைபடத்திலும் இது பிரபலமான இடமாகும்.

No comments