தீபாவளி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு டபுள் போனஸ் தரும் தமிழக அரசு மிகப்பெரிய முடிவு?
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் வழங்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.
இந்த முறை தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு + தீபாவளி போனஸ் என்று இரட்டை போனஸ் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வாரமே தமிழ்நாட்டில் விரைவில் தீபாவளி போனஸ் அறிவிப்பு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்.
தீபாவளிக்கு போக்குவரத்து ஊழியர்கள் உட்பட எல்லோருக்கும் போனஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது அதிகபட்ச போனஸ்தான். எனவே.. பெரும்பாலும் போனஸ் 12- 14 சதவிகிதம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான ஆலோசனைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்ந்தது.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 46% அகவிலைப்படி 01.01.2024 முதல் 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு தொகை அந்த மாதமே வரவு வைக்கப்பட்டு உள்ளது
இரண்டாவது முறை: ஒரு வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் இப்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது. அதன்படி இந்த அக்டோபர் மாதம் இரண்டாம் முறையாக அகவிலைப்படி உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு + தீபாவளி போனஸ் என்று இரட்டை போனஸ் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எவ்வளவு உயர்த்தப்பட்டது: கடந்த முறை அகவிலைப்படி உயர்வில்.. 2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. 1.1.2024 முதல் அகவிலைப்படியை 9% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது.
இந்த புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தால் அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குறைந்து வந்த இந்த புள்ளிகள் தற்போது வேகமாக உயர தொடங்கி உள்ளது.இந்த குறியீடு ஜனவரியில் 132.8 என்ற அளவில் இருந்தது. அதன்பின் ஏற்ற இறக்கமாக புள்ளிகள் சென்று கொண்டு இருந்தன. அதாவது ஒரு புள்ளி ஏறுவது, ஒரு புள்ளி இறங்குவது என்று ஏற்ற இறக்கமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புள்ளிகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கி உள்ளன.
அகவிலைப்படி உயர்வு: இது போக போக்குவரத்து ஊழியர்களுக்கு எப்போது அகவிலைப்படி உயரும் வாய்ப்புள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக 93 ஆயிரம் போக்குவரத்து அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் தனி கார்ப்பரேஷன் என்பதால் இன்னும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படவில்லை. இந்த வருடத்திற்கான 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் போக்குவரத்து சங்கங்கள் சார்பாக அகவிலைப்படி வேண்டி கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட இந்த கடிதத்தை அரசு ஆலேசனை செய்து வருகிறதாம். விரைவில் அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பு இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது போக தமிழ்நாட்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை சேர்த்து வழங்கப்படும். அதன்படி நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையில் பணம் ஒரே கிளிக்கில் அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
வங்கி கணக்கிற்கு நேரடியாக மின்னணு தீர்வு சேவை மூலம் பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments