ஒரு மாசம் டீ,காபி குடிக்காமல் இருந்தால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?
டீ, காபி போன்ற பானங்களை ஒரு மாதம் முழுவதும் அருந்தாமல் இருந்தால் உடலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும்.
குறிப்பாக, இந்த மாற்றங்கள் உடலின் சுகாதாரம், மனநிலை மற்றும் நரம்பியல் சுகாதாரத்தை மேம்படுத்தும்.
பொதுவாக, டீ மற்றும் காபி இரண்டுமே காஃபின் அடிப்படையிலான பானங்கள் என்பதால், அவற்றை திடீரென நிறுத்தினால் சில நன்மைகளும், சில தற்காலிக விளைவுகளும் ஏற்படலாம்.
டீ மற்றும் காபியில் உள்ள காஃபின், நரம்புகளுக்கு தாக்கம்
கொடுக்கக்கூடியது. அதிக அளவில் காஃபின் உட்கொண்டால் தூக்கக் கோளாறுகள்
மற்றும் மனஅழுத்தம் ஏற்படக்கூடும். இவற்றை நிறுத்தியவுடன், தூக்கத் தசை
சீராகி, இரவில் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
டீயில் உள்ள
டையூரிட்டிக் பண்புகள் (diuretic properties) உடலில் நீர் இழப்பை
ஏற்படுத்தும். டீயை தவிர்த்து, தண்ணீர் போன்ற பலம் தரும் பானங்களை
குடிப்பதன் மூலம் நீர்ச்சத்து அதிகரிக்கும், நீரிழப்பு பிரச்சனை குறையும்.
டீ
மற்றும் காபியில் சேர்க்கப்படும் சர்க்கரை உடலுக்கு தீங்கு
விளைவிக்கக்கூடியது. இதை தவிர்ப்பதன் மூலம் சருமத்தில் பளபளப்பு ஏற்படும்.
உடலின் செல்களை சேதப்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்கள் குறையும், இதனால் சீரான
சருமம் கிடைக்கும்.
அதிக அளவில் டீ அருந்துவோருக்கு, செரிமானக்
கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. டீ குடிப்பதை நிறுத்தியவுடன், இந்த
பிரச்சனைகள் குறையும். மேலும், சர்க்கரை உபயோகத்தைக் குறைத்ததின் விளைவாக
உடல் எடையை கட்டுப்படுத்தும்.
டீ மற்றும் காபியில் இருக்கும் காஃபின் உடல் மற்றும் மனதை உற்சாகமளிக்கிறது. அதை திடீரென நிறுத்தினால் சோர்வு, தலைவலி, கவன சிதறல் போன்றவை ஏற்படலாம். ஆனால், சில நாட்களில் உடல் இந்த மாற்றத்துடன் பழகிவிடும்.
டீயை நிறுத்துவது கடினமாக இருக்கும் போது, மூலிகை தேநீர் போன்ற காஃபின் இல்லாத பானங்களை பருகலாம். செம்பருத்தி டீ, ஆவாரம்பூ டீ, பால், வெந்நீர் போன்றவை நன்மைகளை தரக்கூடியவை.
கர்ப்பிணிகள் அதிக டீ அருந்துவதால், குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். மேலும், ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, டீ அளவாக மட்டுமே குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
டீ மற்றும் காபி குடிக்காமல் 1 மாதம் இருந்தால், உடலில் நன்மை தரும் மாற்றங்கள் ஏற்படும். இவை நம் உடலின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், மேலும் உடல் இயல்பாக சீராக செயல்பட உதவும்.
No comments