அடியோடு மாறப்போகுது.. செல்வமகள் சேமிப்பு திட்டம்.. எதிர்பாராத அறிவிப்பு வருது.. ரொம்ப நல்ல முடிவு?
செல்வமகள் சேமிப்பு திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டதிற்கான வரி மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாம்.
ஜனவரி மாதம் புதிய வரி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள.
அக்டோபர்-டிசம்பர் 2024 காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களே தொடரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது இந்தக் காலக்கட்டத்தில் தற்போதுள்ள கட்டணங்கள் மாறாமல் இருக்கும். டிசம்பருக்கு பின்.. அதவாது ஜனவரி மாதம் புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும். அப்போது வரி அதிகரிக்கப்படும் என்கிறார்கள்.
இந்த முடிவால் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு (POTD), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ், மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) போன்றவற்றின் வட்டி விகிதம் அக்டோபர் மாதமும் அதே போல் தொடரும்.
இதன் காரணமாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்தால் பல ஆயிரங்களை சம்பாதிக்க முடியும். இதற்கு சில முக்கியமான வழிகள் இருக்கின்றன. அந்த வழிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு அதிக பயன் உள்ளதாக இருக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
பொதுவாக ஒவ்வொரு காலாண்டிற்கும் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றப்படும். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து இந்த வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த செப்டம்பர் காலாண்டுக்கும் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வருகின்றன செப்டம்பர் காலாண்டுக்கும் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வமகள் சேமிப்புத் திட்டம்) திட்டத்துக்கு 8.2% வட்டி வழங்கப்படும். இதுதான் மத்திய அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டிகளில் அதிகபட்சமாக வழங்கப்படும் வட்டி ஆகும்.
வட்டி இல்லை: ஆனால் இதில் வட்டி மாற்றப்படவில்லை என்றாலும் கூட மத்திய அரசு தொடங்கி வைத்த ஒரு சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வாய்ப்பு உள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் நிறைய லாபம் வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
எப்படி சேமிப்பது?: 10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
திட்டத்தின் வேறு அம்சங்கள்: இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்த தொகையை செலுத்தி கணக்கை தொடங்க முடியும். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தை செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை மாதம் வைப்பு தொகையாக செலுத்த முடியும்.
ஆண் குழந்தைகள் திட்டம்: இதற்கு இணையான ஒரு திட்டம் ஆண் குழந்தைகளுக்காக உள்ளது. அது National Savings Certificate (NSC) திட்டம். அதாவது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம். தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மூலம் 2 லட்சம் ரூபாய் வருவாய் எப்படி ஈட்டலாம் என்று பார்க்கலாம்.
இது அரசாங்கத்தால் வழங்கப்படும் குறைந்த ஆபத்துள்ள நிலையான வருமான திட்டமாகும், மேலும் இது இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கிறது. ஆண் குழந்தைகளுக்கான இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டம் உங்கள் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் சிறந்த அம்சங்கள் மற்றும் பலன்களுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது சிறந்த வருவாயை உருவாக்க நிலையான வருமானம் மற்றும் உத்தரவாதமான வருமானத் திட்டத்தை எளிதாக்குகிறது. இந்த திட்டம் தற்போது ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தில் கிடைக்கிறது.
No comments