Breaking News

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கூடுதல் நாட்கள் விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு.!!!

 


மிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான திருத்திய நாள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.

அதன்படி பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பதை அனைத்து தலைமை ஆசிரியர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு முன்னதாக பள்ளிகளில் சனிக்கிழமை தோறும் வேலை நாட்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இனிவரும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு அரையாண்டு தேர்வு நடைபெறும் தேதியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும் என்றும் 9 நாட்கள் விடுமுறை என்றும் மீண்டும் ஜனவரி 2-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே மாதத்தில் 6-ம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மார்ச் 22ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக 210 நாட்களை விட கூடுதலாக பள்ளி வேலை நாட்கள் இருந்த நிலையில் தற்போது அதனை திருத்தி 210 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் வைக்குமாறு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதால் கூடுதல் நாட்கள் விடுமுறை வந்துள்ளது.

No comments