TN Government Employees: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம்? எப்போது தெரியுமா?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. அன்றை தினம் புதிய உடை அணிந்து குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இடையில் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.
அடுத்து 2ம் தேதி சனிக்கிழமையும், 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் உள்ளது. எனவே இடையில் உள்ள நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை கிடைக்குமா என பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பில் காத்து கிடக்கின்றனர். வெள்ளிக்கிழமை அரசு பொது விடுமுறை அறிவித்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் நிலை உருவாகிவிடும்.
எனவே கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசு தீபாவளிக்கு முந்தைய நாள் அல்லது அடுத்த நாள் அரசு பொது விடுமுறையாக அறிவித்து வருகிறது. எனவே நவம்பர் 1ம் தேதி விடுமுறை விட அதிக வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 28, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிரெடிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில், அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி கொண்டாட அதற்கான செலவுகளை மேற்கொள்ள உதவியாக நடப்பு அக்டோபர் மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க ஆவன செய்ய வேண்டுகிறோம். துணிமணி, பட்டாசு, பலகாரங்கள் வாங்க முன்கூட்டியே சம்பளம் வழங்கினால் அது எங்கள் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
கடந்த செப்டம்பர் மாத சம்பளம் மத்திய அரசின் பங்களிப்பு தாமதமான போதும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட 32,500 பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் பெரு மனதுடன் மாநில அரசு நிதியில் இருந்து வழங்கி உதவியதை போல் இதையும் இந்த நேரத்தில் செய்ய வேண்டுகிறோம். மேலும் பண்டிகை முன்பணம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க ஆணையிட வேண்டுகிறோம்.
முன்பணம் கடனாக வழங்கி அதனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டுகிறோம். 13 ஆண்டுகளாக தற்போது ரூ.12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12000 பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் மேம்பட, திமுக தேர்தல் வாக்குறுதி 181-ஐ அரசாணையாக்கி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments