Breaking News

புது ரூல்.. ஆகஸ்ட் 1 முதல் அமல்.. ரூ.3000 குள்ள இருந்தா.. 1% கட்டணம்.. Payment Apps-ல் கைவைத்த முக்கிய வங்கி!

 


ந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank) ஆனது தனது சேவையின் கீழ் உள்ள கிரெடிட் கார்டு (Credit Card) பயனர்களுக்கு புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (New Rules and Conditions) கொண்டு வந்துள்ளது.

எச்டிஎப்சி வங்கியின் இந்த புதிய விதிகள் 2024 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அவைகளில் தேர்ட்-பார்ட்டி பேமண்ட் ஆப்கள் (Third-party payment apps) தொடர்பான புதிய விதி ஒன்று மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதென்ன விதி? இதோ விவரங்கள்:

மூன்றாம் தரப்பு பேமண்ட் ஆப்களை பயன்படுத்தி வாடகை பரிவர்த்தனைகளை (Rental Transaction) செய்யும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. அதாவது பேடிஎம் (PayTM), கிரெட் (CRED), மொபிகுவிக் (MobiKwik) மற்றும் செக் (Cheq) போன்ற மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப்ஸ் மூலம் செய்யப்படும் அனைத்து வாடகை பரிவர்த்தனைகளுக்கும், பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

இத்தகைய பேமெண்ட்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.3,000 என்று வரையறுக்கப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுபோல பயன்பாட்டு பரிவர்த்தனை (Utility transactions) கட்டணம், எரிபொருள் பரிவர்த்தனை (Fuel transactions) கட்டணம், கல்வி பரிவர்த்தனைகள் மீதான கட்டணம் (Charge on educational transactions), சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான (international transactions) கட்டணம் போன்றவைகளிலும் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.

யுபிஐ (UPI) தொடர்பான சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, என்சிபிஐ (NCPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது (National Payments Corporation of India), இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான ஒன் வேர்ல்ட் யுபிஐ வாலட்டை (One World UPI Wallet) சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது.

என்சிபிஐ-யின் கூற்றுப்படி ஒன் வேர்ல்ட் யுபிஐ வாலட் ஆனது, இந்திய சிம் கார்டு அல்லது இந்திய வங்கி கணக்கு போன்ற தேவைகள் இல்லாமல் யுபிஐ வழியாக பணம் செலுத்துவதற்கான வசதியை வழங்கும். இது பிபிஐ (PPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (Prepaid Payment Instrument) என்கிற தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது.

மேலும் சர்வதேச பயணிகள் யுபிஐ ஒன் வேர்ல்ட்-ஐ பயன்படுத்தி தங்கள் நிதி தேவைகளை ஒழுங்கமைக்க முடியும் என்றும், இதன்கீழ் பயன்படுத்தப்படாத இருப்புத்தொகையை அசல் கட்டண மூலத்திற்கு மாற்ற முடியும் என்றும் என்றும் என்சிபிஐ கூறியுள்ளது. இந்தியாவால் உருவாக்கப்பட்ட இந்த ரியல்டைம் பேமண்ட் முறையை வெளிநாட்டு பயணிகள் அனுபவிப்பதன் மூலம், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய டிஜிட்டல் கட்டண சூழலை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளோம் என்றும் என்சிபிஐ கூறியுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ஒன் வேர்ல்ட் யுபிஐ வாலட் ஆனது முதன்முதலில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஜி20 இந்தியா உச்சிமாநாட்டின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது அடிப்படையில் ஒரு ப்ரீபெய்ட் வாலட் ஆகும். இது பயணிகளை எளிதாக பணம் அனுப்ப அனுமதிக்கிறது மற்றும் ஸீரோ ட்ரான்சாக்ஷன்ஸ் மற்றும் ஆன்போர்டிங் கட்டணங்களின் போது பணத்தை மாற்றுவதில் உள்ள தொந்தரவையும் நீக்குகிறது.

ஒன் வேர்ல்ட் யுபிஐ-ஐ பயன்படுத்த விரும்பும் பயனர்கள் கேஒய்சி (KYC) நடைமுறையையும் பின்பற்ற வேண்டி இருக்கும். இதற்கு பாஸ்போர்ட், விசா மற்றும் சர்வதேச தொலைபேசி எண் போன்ற விவரங்கள் தேவைப்படும் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி பயணிகளால் தங்கள் ஒன் வேர்ல்ட் யுபிஐ வாலட்டில் பணத்தை பரிமாற்ற முடியும்.

மேலும் அந்நிய செலாவணி நிபுணர்களின் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்டர்களில் பணத்தை பரிமாறிக்கொள்ளலாம். தற்போதைய நிலவரப்படி, ஒன் வேர்ல்ட் யுபிஐ வாலட்டில் ஒருவர் எவ்வளவு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். அதற்கு வரம்பு உள்ளதா அல்லது அசல் அக்கவுண்டிற்கு பணத்தை திருப்பி அனுப்ப உதவும் விருப்பம் உள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

No comments