Breaking News

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு?

 


ன்று ஜூலை 29ம் தேதி திங்கட்கிழமை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் ஆடிக்கிருத்திக்கையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மலை மீது அமைந்துள்ள முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் உள்ளூர் பக்தர்களும் பங்கு பெற வசதியாகவும், வெளியூர் பக்தர்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்படும். பல மாவட்டங்களில் இருந்தும் திருத்தணி முருகனைத் தரிசிக்க அன்றைய தினம் பக்தர்கள் குவிவார்கள். இந்நிலையில், உள்ளூர் மக்களும் ஆடிக் கிருத்திகை விழாவில் கலந்து கொள்ள வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவிப்பு செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். இன்று ஜூலை 29ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை முழு பணி நாட்களாக செயல்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

No comments