Breaking News

வருமான வரி தாக்கல்.. இப்படி ஒரு அதிர்ச்சி தகவலா? இன்னும் 5 நாள் தானே இருக்கு.. என்ன நடக்குமோ?

 


2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது.

இதுவரை 50 சதவிகிதம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என்று கணக்கு தெரிவிக்கிறது. இதனால் ஜூலை 31ம் தேதி காலக்கெடு ஆகஸ்ட் மாதம் கடைசி தேதிக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும், வரி செலுத்துவோர் இறுதித் தருணம் வரை தாமதிக்கக் கூடாது. ITR ஐ முன்கூட்டியே தாக்கல் செய்வது நல்லது ஆகும். இப்படி இருக்க முக்கியமான பிரச்சனை ஒன்று பலருக்கும் எழுந்துள்ளது.

பான் கார்டு - ஆதார் கார்டு பெயர்கள் ஒரே மாதிரி இல்லாத காரணத்தால் இந்தியர்கள் பலர் பிரச்சனைகளை சந்திக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக தென்னிந்தியர்கள் பலர் இதனால் பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கி உள்ளனர். தென் இந்தியாவில், பெரும்பாலான மக்கள் இனிஷியலைப் பயன்படுத்துகிறார்கள், குடும்பப்பெயர் அல்ல. ஆனால் PAN குடும்பப்பெயரை கட்டாயமாக்குகிறது மற்றும் இனிஷியலை அனுமதிக்காது. அதே சமயம் ஆதார் மற்றும் ITR ஆகியவை பெயருடன் இனிஷியலை அனுமதிக்கிறது.

இதனால் சிலருக்கு ஆதாரில் இனிஷியல் இருக்கும். ஆனால் பான் கார்டில் அது இருக்காது. இதனால் இரண்டும் ஒரே மாதிரி இல்லை என்ற பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் இரண்டு பெயர்களும் ஒரே மாதிரி இல்லை என்ற சிக்கல்கள் தற்போது எழ தொடங்கி உள்ளன.

வருமான வரி தாக்கலின்போதும் ரீபண்ட் கிடைப்பதில் இதனால் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. பலருக்கும் வருமான வரி தாக்கல் செய்தும் ரீபண்ட் கிடைப்பது இல்லை.

கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் முன் பின்வரும் 8 விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.

1. திருத்தப்பட்ட வரி அடுக்குகள் மற்றும் விகிதங்கள்: இந்த ஆண்டு, அரசாங்கம் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் புதிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விலக்குகள் இல்லாமல் குறைந்த வரி விகிதங்களை வழங்குகிறது. பல்வேறு விலக்குகளை உள்ளடக்கிய பழைய முறை விட இது எளிதாகும். பழையது புதியது எது வேண்டுமோ நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் நிதி நிலைமைக்கு எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க, இரண்டு முறைகளையும் ஒப்பிடுவது முக்கியம்.

2. முதல் முறை - பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

3. புதிய முறை; பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு முன்பு வரை, நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும்.

அதுவே 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை வாங்கினால் 10 சதவிகிதம் வரி இருக்கும். 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். நடைமுறையில் இருந்த இந்த புதிய வரி விதிப்பு முறையில் கடந்த பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டது.

3. ரிபேட்; புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.

அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் . 300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் . 600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும் 900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும் 1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும் 15 மேல் வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் . புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது.

4. விலக்கு இல்லை: நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும்.

5. ஓய்வூதியதாரர்களுக்கான நிலையான விலக்கு: ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.50,000 புதிய தரக் கழிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஓய்வூதிய வருமானத்திற்கும் பொருந்தும். இது ஊதியம் பெறும் நபர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் போன்றது. ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வரிக்குட்பட்ட வருவாயைக் குறைப்பதற்காக இந்த விலக்கு கோரப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்

.

6. பிரிவு 80C மற்றும் 80D வரம்புகளில் மாற்றங்கள்: பிபிஎஃப், என்எஸ்சி மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் முதலீடுகளை உள்ளடக்கிய பிரிவு 80சியின் கீழ் வரம்புகள் ரூ.1.5 லட்சமாக இருக்கும். வரி செலுத்துவோர் இப்போது தங்களுக்கும், தங்கள் குடும்பங்களுக்கும் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் உடல்நலக் காப்பீட்டிற்காக செலுத்தப்பட்ட பிரீமியங்களுக்கு அதிக விலக்குகளைப் பெறலாம்.

7. புதுப்பிக்கப்பட்ட டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் விதிகள்: மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்) மற்றும் மூலத்தில் வசூலிக்கப்படும் வரி (டிசிஎஸ்) ஆகியவற்றின் நோக்கம் விரிவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க மாற்றங்களில் சம்பளம் பெறாத தனிநபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான புதிய TDS விகிதங்கள் மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. வரி செலுத்துவோர் தங்களின் டிடிஎஸ் சான்றிதழ்களை மதிப்பாய்வு செய்து, தங்களின் ஐடிஆரில் பொருத்தமான கிரெடிட்கள் கோரப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

8. மதிப்பீடு மற்றும் முறையீடுகள்: மனித இடையூறுகளை குறைக்கவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முகமற்ற மதிப்பீடு மற்றும் முறையீட்டு வழிமுறைகளை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைனில் எளிதாக பணிகளை செய்ய எல்லாம் ஏஐ மற்றும் டிஜிட்டல் ஆகி உள்ளது.

No comments