Breaking News

குட் நியூஸ்! 7ஆவது ஊதியக் குழு: அகவிலைப்படி உயர்வு எப்போது? 4 % உயர்ந்தால் மொத்தம் ஊதியம் எவ்வளவு?

 


7ஆவது சம்பள கமிஷனில் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல்கள் மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு வெளியாகியுள்ளது.

ஒரு வேளை 4 சதவீதம் உயர்ந்தால் மொத்தமாக எவ்வளவு ஊதியம் கிடைக்கும் என்பது குறித்தும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. முதலில் ஜனவரியிலும் இரண்டாவதாக ஜூலையிலும் உயர்த்தி வழங்கும். இந்த ஆண்டு ஜனவரியில் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து, மொத்தம் 50 சதவீதமாக உள்ளது.

ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இதுகுறித்து அறிவிப்பு வரும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதுவரை கிடைத்துள்ள தரவுகளின் படி அகவிலைப்படி மேலும் 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அகவிலை 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் 7ஆவது ஊதியக் குழுவின் படி அடிப்படை ஊதியம் ரூ 18 ஆயிரம் பெறுவோருக்கு மாதம் ரூ 720 அதிகரித்து ஆண்டுக்கு ரூ 8,640 கூடுதலாக கிடைக்கும். இதே ரூ 20 ஆயிரம் ஊதியம் கிடைத்தால் மாதம் ரூ 800 அதிகரித்து ஆண்டுக்கு 9600 ரூபாய் உயரும்.

ரூ 25 ஆயிரம் அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ 1000 வீதம் ஆண்டுக்கு ரூ 12 ஆயிரம் கிடைக்கும். அது போல் ரூ 30 ஆயிரம் அடிப்படை ஊதியம் பெறுவோருக்கு ரூ 1200 வீதம் ஆண்டுக்கு ரூ 14,400 உயரும். ஒரு வேளை அடிப்படை ஊதியம் ரூ 40 ஆயிரம் என்றால் மாத ஊதியம் ரூ 1600 அதிகரித்து ஆண்டுக்கு ஊதிய உயர்வு ரூ 19,200 அதிகரிக்கும்.

அடிப்படை ஊதியம் ரூ.70 ஆயிரமாக உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ.2,800, ஆண்டுக்கு ரூ.33,600, ரூ.80 ஆயிரம் எனில், மாத ஊதியம் ரூ.3,200, ஆண்டுக்கு ரூ.38,400, ரூ.90 ஆயிரம் உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ.3,600, ஆண்டுக்கு ரூ.43,200, ரூ.1 லட்சமாக இருந்தால், மாத ஊதியம் ரூ.4 ஆயிரமாகவும், ஆண்டுக்கு ரூ.48 ஆயிரமாகவும் இருக்கும் என தெரிகிறது. அகவிலைப்படி குறித்து எந்த அறிவிப்புகள் வெளியிடப்படாவிட்டாலும் விரைவில் இது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

No comments