Breaking News

ஆகஸ்ட் மாதம் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா..

 


கஸ்ட் மாதத்தில் வங்களுக்கான விடுமுறை நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் சரியான நேரத்தில் வங்கிகளை தேவைக்காக அணுக முடியும்.
ஏடிஎம் மிஷின்கள் நாடு முழுவதும் நிறுவப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மற்ற பல அலுவல்களுக்காக வங்கியை தொடர்ந்து அணுகி கொண்டிருக்கின்றனர். வங்கியில் பணம் போடுவது, நகைகளை அடமானம் வைத்து பணம் எடுப்பது, பல்வேறு காரணங்களுக்காக வங்கிகளில் லோன் பெறுவது என அன்றாடம் பொதுமக்கள் வங்கியை பயன்படுத்தி வருகின்றனர்.

மாதந்தோறும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை தவிர்த்து ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் வங்கிகள் செயல்படாது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது.

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15 வியாழன் அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் ஆகும். 19 ஆம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதால் அன்றைக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நான்காவது வாரத்தில் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாமல் இருக்கும்.

அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 9 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. எனவே இந்த நாட்களை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் வங்கிகளை தங்களது தேவைக்காக அணுக வேண்டும்.

No comments