Breaking News

10 ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்... தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள் காத்துக்கிட்டு இருக்கு..!

 


பால் துறையை பொறுத்தவரை GDS எனப்படும் பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் இன்றி பத்தாம் வகுப்பு மார்க் அடிப்படையிலேயே பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது சுமார் 44 ஆயிரம் ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தபால் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 44,228 ஆகும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் இடத்திற்கான உள்ளூர் மொழி படித்திருக்க வேண்டும். கணினி பற்றிய அடிப்படை அறிவு அவசியம். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கவேண்டும்.

18 வயது பூர்த்தியானவர்களும் 40 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் இருக்கின்றன. எஸ்சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு உண்டு. இது பற்றிய விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Branch Post Master பணிக்கு 12,000 - 29,380 வரை சம்பளமாக வழங்கப்படும்.

ABPM/DakSevak- பணிக்கு 10,000/ - Rs.24470/- வரை வழங்கப்படும்.

பெண்கள், எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு. பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 15.07.2024, விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.08.2024 ஆகும்.

இந்த காலிப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் அதாவது மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆகவே, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://indiapostgdsonline.gov.in/ இங்கே கிளிக் செய்யவும்.

No comments