Breaking News

Flipkart பிச்சிக்கும்.. வெறும் ரூ.8000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

 

ட்ஜெட்டில் பட்டையை கிளப்பும்படி 50 எம்பி கேமரா, 1 டிபி மெமரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்சிட்டி 6100பிளஸ் சிப்செட் உடன் வெளியான போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G) போனின் புதிய மெமரி வேரியண்ட் வெளியாகி இருக்கிறது.

பிளிப்கார்ட்டில் தள்ளுபடி உடன் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போக்கோ எம்6 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

போக்கோ எம்6 5ஜி அம்சங்கள் (Poco M6 5G Specifications): இந்த போக்கோ மாடலில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) புரொடெக்சன் வருகிறது.

இந்த பட்ஜெட்டிலும் டிஸ்பிளே புரொடெக்சன் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. இந்த கேமராவில் 1080p ரெக்கார்டிங், போர்ட்ராய்டு மோட், நைட் மோட், வாய்ஸ் ஷட்டர், டில்ட்-ஷிப்ட், எச்டிஆர் மற்றும் ஃபிலிம் ஃபில்டர்கள் போன்ற பீச்சர்கள் வருகின்றன.

பட்ஜெட்டுக்கு ஏற்ப 5 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. அதேபோல ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் வருகிறது. இந்த போக்கோவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது.

இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வந்தன. இப்போது, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. இதுபோக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது.

இந்த போக்கோ எம்6 5ஜி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி உடன் 195 எடை மற்றும் 8.19 தடிமன் கொண்டிருக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட், டூயல் நானோ சிம் சிலாட், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வருகிறது.

மேலும், பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் வருகிறது. வை-பை 802, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் 5ஜி, டூயல் 4ஜி கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. கேலடிக் பிளாக், ஓரியன் ப்ளூ, போலாரிஸ் கிரீன் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போக்கோ எம்6 5ஜி போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. இந்த வேரியண்ட்டுக்கு அறிமுக சலுகையாக குறிப்பிட்ட பேங்க் கஸ்டமர்களுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,999 பட்ஜெட்டில் வாங்கலாம். ஜூலை 20 முதல் பிளிப்கார்டில் விற்பனை தொடங்குகிறது.

No comments