Breaking News

புது விதிகள்.. ஜூலை 20 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்ல பேலன்ஸ் இல்லனா.. இதான் நடக்கும்.. ஒரு வருடம் அதிபட்சம்!

 


ஜூலை 20ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் புதிய விதிகளின்படி ஒரு வருடத்திற்கும் மேலாக பரிவர்த்தனை மேற்கொள்ளாத அக்கவுண்ட்கள் மற்றும் ஜீரோ பேலன்ஸ் வைக்கப்பட்டிருக்கும் அக்கவுண்ட்கள் மூடப்பட இருக்கின்றன.

கஸ்டமர்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் அக்கவுண்ட்களை சீரைமக்க இந்த விதிகள் அமலுக்கு வருகின்றன. இருப்பினும, திடீரென்று அக்கவுண்ட்கள் மூடப்படாது. 30 நாட்களுக்கு முன்பாக கஸ்டமர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த அக்கவுண்ட் மூடும் நடவடிக்கை எந்த கஸ்டமர்களுக்கு வருகிறது என்பது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களகள் அந்தந்த பேங்க் ஆப்களை பயன்படுத்துவதைவிட கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற மூன்றாம் தர பேமெண்ட் ஆப்களையே பயன்படுத்துகின்றனர். சொல்லப்போனால், மேற்கூறிய ஆப்களிலேயே நாட்டின் 90 சதவீதத்துக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் நடக்கின்றன.

இதனால், மத்திய அரசு மூன்றாம் தர யுபிஐ ஆப்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. அதோடு அந்தந்த பேங்க் ஆப்களுக்கு கஸ்டமர்களை மாற்றவும் திட்டமிட்டுள்ளது. சொல்லப்போனால், பேடிஎம் நிறுவனத்துக்கு ஆர்பிஐ மூலம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இருந்தே இதன் முக்கியத்துவம் பற்றி கஸ்டமர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த புதிய விதிகளும் பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கே அமலுக்கு வர இருக்கிறது. அதாவது, ஆர்பிஐ விதிகளுக்கு பிறகு பேடிஎம் வாலெட் (Paytm Wallet) பயன்படுத்துவது குறைந்துவிட்டது. அதேபோல பேடிஎம் வாலெட்டில் பணம் டெபாசிட் செய்வதையும், பரிவர்த்தனைகளை செய்வதையும் கஸ்டமர்கள் தவிர்த்துவிட்டனர். இதனால் பல வாலெட் அக்கவுண்ட்கள் செயலற்ற நிலையில் இருக்கிறது.

ஜீரோ பேலன்ஸ் வைத்திருக்கும் வாலெட் அக்கவுண்ட்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இதனை கட்டுப்படுத்தவே பேடிஎம் நிறுவனம், இந்த புதிய விதிகளை ஜூலை 20ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருகிறது. இந்த புதிய விதிகளின்படி, ஒரு வருடத்துக்கும் மேலாக எந்தவித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத பேடிஎம் வாலெட்கள் மூடப்படும்.

அதேபோல ஜீரோ பேலன்ஸ் வைக்கப்பட்டிருக்கும் பேடிஎம் வாலெட்களும் மூடப்படும். இந்த நடவடிக்கை திடீரென்று எடுக்கப்படாது. பேடிஎம் வாலெட்கள் செயல்படாமல் இருப்பது குறித்து கஸ்டமர்களுக்கு 30 நாட்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்படும் என்று பேடிஎம் பேமெண்ட் பேங்க் லிமிடெட் (Paytm Payments Bank Limited) தெரிவித்திருக்கிறது.

ஆகவே, ஜூலை 20ஆம் தேதி முதல் படிப்படியாக செயலற்ற வாலெட் அக்கவுண்ட்கள் மூடப்பட இருக்கின்றன. இந்த தேதியில் மூடப்பட இருக்கும் வாலெட் அக்கவுண்ட்களின் கஸ்டமர்களுக்கு கடந்த ஜூன் 19ஆம் தேதியில் இருந்தே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும். ஆகவே, பேடிஎம் வாலெட் வேலை செய்யவில்லை என்று குழப்பமடைய வேண்டி இருக்காது.

உங்களுக்கு பேடிஎம் வாலெட் தேவையில்லை என்றால், பின்வரும்படிகளை பார்த்து நீங்களே மூடிக்கொள்ளலாம். முதலில் பேடிஎம் ஆப்பை ஓப்பன் செய்ய வேண்டும். பேடிஎம் பேமெண்ட் பேங்க் வாலெட் (Paytm Payments Bank Wallet) பக்கத்துக்கு செல்ல வேண்டும். இப்போது, நன்-ஆர்டர் கேள்விக்களுக்கு உதவி தேவை (Need help with non-order related queries) டேபை கிளிக் செய்ய வேண்டும்.

எனது வாலட்டை மூட விரும்புகிறேன் (I want to close my wallet) என்பதை கிளிக் செய்ய வேண்டும். இந்த செய்துவிட்டால், 2 வேலை நாட்களில் உங்களது பேடிஎம் வாலெட் மூடப்பட்டுவிடும். பேடிஎம் கஸ்டமர்கள் பயன்படுத்தாத பேடிஎம் வாலெட்டில் பேலன்ஸ் இருந்தால், அதை உடனே வங்கி கணக்குக்கு மாற்றுவது அல்லது செலவு செய்துவிடுவது நல்லது.

No comments