Breaking News

மாதம் 500 முதலீடு செய்தால் போதும்..4 லட்சம் அள்ளலாம்! போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம்..எப்டின்னு பாருங்க

 


தபால் நிலையங்களில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்தாலும் வட்டியுடன் முதிர்வு தொகையாக லட்ச கணக்கில் திரும்ப பெறக்கூடிய பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன.

அத்தகைய ஒரு சேமிப்பு திட்டம் பற்றி இங்கே பார்க்கலாம்.

வாழ்நாள் எல்லாம் என்னதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் பணக்காரர் ஆவதற்கு சேமிப்புதான் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. சேமிப்பை பொறுத்தவரை பெரிய தொகையில் மட்டுமே சேமிக்க முடியும் என நினைத்து சேமிக்காமல் இருந்தீர்கள் என்றால் உடனே அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்..

ஏனெனில் நம் கையில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அந்த பணத்தை வைத்து சேமிக்க பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களும் தற்போது உள்ளன. குறிப்பாக போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் நிறைய உள்ளன. எப்.டி எனப்படும் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது அதிக ஆபத்து இல்லாத முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

எனினும், அதனைவிட போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது, கூடுதல் பலன் கிடைக்கும். வெறும் 500 ரூபாய் முதலீடு செய்தால் முதிர்வு தொகையாக 25 ஆண்டுகளில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 321 கிடைக்கும். போஸ்ட் ஆபிசின் இந்த சூப்பர் ஸ்கீம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் எனப்படும் பிபிஎப் திட்டம் என்பது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ. 500 முதல் ரூ.1.5 லட்சம் வரை சேமிக்க முடியும். முதிர்வு காலம் முடிந்த பிறகும் நீங்கள் நீட்டிக்க விரும்பினால் மேலும் 5 ஆண்டுகள் பணம் கட்டி சேமிக்கலாம்.. மாதம் ரூ. 500 பணத்தை இந்த பிபிஎஃப் திட்டத்தின் கீழ் செலுத்தி ஆண்டுக்கு ரூ.6000 ஆயிரம் செலுத்தினால் 15 ஆண்டுகளில் வட்டியுடன் சேர்த்து ரூ.1,62,728 கிடைக்கும்.

பிபிஎஃப் சேமிப்பு திட்டத்தில் தற்போது 7.1 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகள் முடிந்தாலும் இதை 5.5 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ள முடியும். இதன்படி பார்த்தால் 20 ஆண்டுகளில் ரூ. 2 லட்சத்து 66 ஆயிரத்து 332ம், 25 ஆண்டுகளில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 321 ம் கிடைக்கும்.

இதேபோல பல சிறு சேமிப்பு திட்டங்களை போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. குறிப்பாக நீங்கள் ஒரு பெண் குழந்தையின் தந்தை என்றால், உங்கள் மகள் பெயரில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் பணத்தை சேமிக்க முடியும். குறைந்த பட்சம் ரூ.250 ம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சமும் ஆண்டுக்கு சேமிக்கலாம்.

இதற்கு வட்டி 8.2 சதவிகிதம் வழங்க்கப்படுகிறது. 15 ஆண்டுகள் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். 21 ஆண்டுகளுக்கு பிறகு முதிர்வு தொகையை எடுக்க முடியும். 15 ஆண்டுகளில் நீங்கள் செய்யும் முதலீடு 90 ஆயிரம் ரூபாயாக இருக்கும். 8.2 சதவிகித வட்டியுடன் சேர்த்து 21 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2,77,103 கிடைக்கும்.

No comments