Breaking News

மிஸ்ஸானா.. பெரிய சிக்கல்.. அரசு, தனியார் ஊழியர்கள் உடனே உஷார் ஆகுங்க.. ரூ.5000 கட்ட வேண்டி இருக்கும்:

 

வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என்பதை வரி செலுத்துவோம் அறிந்திருக்க வேண்டும்.

2023-2024 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-2025) வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 ஆகும். தனிநபர்கள் ஜூலை 31 காலக்கெடுவைத் தவறவிட்டால், அவர்கள் டிசம்பர் 31, 2024க்குள் தாமதமாகத் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

ஒரு தாமதமான வருமானம் கணக்கு தாக்கல் என்பது தற்போதைய ஜூலை 31 காலக்கெடுவிற்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கை குறிக்கிறது.ஜூலை 31ம் தேதி செலுத்த தவறினால் அபாரதத்துடன் டிசம்பர் 31 க்கு முன் ஒருவர் தாமதமான ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாகத் தாக்கல் செய்வதால் சில பாதிப்புகள் இருந்தபோதிலும் பெரிய அளவில் தண்டனைகள் விதிக்கப்படாது. மாறாக.. வருமான வரியே தாக்கல் செய்யப்படாமல் போனால் கடுமையான அபராதங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

அபராதம்: 2023-24 நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு தேதிக்குள் உங்கள் ITRஐத் தாக்கல் செய்யத் தவறினால், தாமதமான வருமானத்தை சமர்ப்பிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் படி, தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம் ரூ. 5000 வசூலிக்கப்படும். உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு வருமான வரியில் refundல் இழப்பு தொடங்கி பல விதமான இழப்புகளை சந்திக்கவும் நேரிடும். சிலர் தாக்கல் செய்யாமல் போனால் சிறை தண்டனையும் கூட விதிக்கப்படலாம்.

கிரிமினல் குற்றம் அல்ல; அதே சமயம் தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

வருமான வரிக்கான் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் இறுதி நாள் நெருங்கி வருகிறது. ஏற்கனவே இதற்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கு பணம் வந்துவிட்டது. தவறான வருமான வரி கணக்கு மற்றும் விலங்குகளை பெறும் வகையில் வருமான வரிக் கணக்கு ரிட்டர்னை தாக்கல் செய்ய கூடாது என்று வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருமான தாக்களில் தவறான தகவல்களை கொடுக்க கூடாது என்று மத்திய நிதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய நடத்தை மிக தவறானது. கடுமையான விளைவுகளை பணியாளர்கள் இதன் மூலம் சந்திக்க நேரிடும். இது பெரிய அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைக்கு கூட வழிவகுக்கும் நிலை இருந்தது. இதில் முறைகேடுகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.

வருமான வரித் தாக்கல்: இந்த நிலையில்தான் தற்போது தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதை கிரிமினல் குற்றமாக

வருமான வரி: ஏற்கனவே குறித்த நேரத்தில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கும் ரிட்டர்ன்ஸ் கிடைத்துவிட்டது. பலருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது. ஆனால் சிலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் இன்னும் ரீ பண்ட் கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் விளக்கப்பட்டு உள்ளன.

முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும்.வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.

இதில் கிட்டத்தட்ட 31 லட்சம் பேர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விட்டுள்ளனர். ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செய்யவில்லை. இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல்ஸ் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ஏற்கனவே ரி பண்ட் சென்றுவிட்டது.

வருமானத்தில் வரி செலுத்துவோரின் கோரிக்கைகளை நிரூபிக்கும் விதமாக சில கூடுதல் ஆவணங்கள் வரி அதிகாரிக்கு தேவைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீங்கள் லோன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் கணக்கில் வீட்டு லோனிற்கான ஆதாரங்கள் இல்லையென்றால் அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் கேட்கப்படும். இதுபோன்ற சமயங்களில், வரி செலுத்துபவருக்கு இவற்றை வழங்குமாறு வரி அலுவலர் கோரிக்கைகளை அனுப்புவார். இவை வரி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், ரிட்டர்ன் தரப்படும்.

இந்தியாவில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தவர்களின் கிட்டத்தட்ட 31 லட்சம் பேருக்கு பணம் அனுப்பப்படவில்லை இவர்கள் உடனடியாக இ வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். வேறு காரணங்களுக்காக கணக்கில் பணம் பெறாதவர்கள் உடனடியாக அந்த தவறுகளை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஐடி ரிட்டர்ன்ஸ் அவர்களுக்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments