பெற்றோர்களே..!! குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் முன் இந்த Settings-ஐ மாற்ற மறந்துறாதீங்க..!!
இப்போதெல்லாம் குழந்தைகள் தங்கள் பள்ளி முடித்து வந்தவுடன் தங்கள் ஓய்வு நேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடுகின்றனர்.
ஒரு குழந்தையின் கையில் எப்பொழுதும் செல்போன் உள்ளிட்ட கேஜெட்கள் இருப்பது அவர்களின் கண்களையும், உடலையும் பாதிக்கிறது மற்றும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இன்று, குழந்தைகளின் கைகளில் மொபைல்கள் இருப்பதால், அவர்கள் இணையத்தில் ஆபாசத்தை அணுகுவது மிகவும் எளிதாகிவிட்டது. இதன் காரணமாக, அவர்கள் தவறான பாதையில் செல்லும் அபாயமும் அதிகரித்துள்ளது.
பல நேரங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பிடிவாதத்திற்கு அடிபணிந்து, எல்லா நேரங்களிலும் அவர்களிடமிருந்து செல்போன் அல்லது எந்த கேஜெட்டையும் எடுக்க முடியாது நிலை உள்ளது. ஆகையால், குழந்தைகளுக்கு இன்டர்நெட் அல்லது செல்போனைப் பாதுகாப்பானதாக்க பெற்றோர்கள் சில வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவை என்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
செட்டிங்ஸை முறைப்படுத்தவும் :
குழந்தைகளுக்கு மொபைலைப் பாதுகாப்பாக மாற்றவும், பெரியவர்களின் உள்ளடக்கத்தில் இருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கவும், முதலில் நீங்கள் Android-ல் Google Play கட்டுப்பாடுகளை இயக்க வேண்டும். இது குழந்தை அவர்களின் வயதுக்கு பொருந்தாத பயன்பாடுகள், கேம்கள் மற்றும் பிற இணைய ஆதாரங்களைப் பதிவிறக்குவதைத் தடுக்கும். இதற்கு முதலில் குழந்தையின் சாதனத்தில் உள்ள கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று அதில், 'Parental Controls' என்ற விருப்பம் இருக்கும்.
அதைத் தட்டினால், பின்னை அமைக்கும்படி கேட்கப்படுவீர்கள். பின்னை அமைப்பதன் மூலம் parental control settings-ஐ மாற்றலாம். பின்னை அமைத்தவுடன், ஒவ்வொரு வகைக்கும் ஸ்டோர் அடிப்படையிலான வயதுக் கட்டுப்பாடுகளை அமைக்கலாம். இந்த பின்னை உங்கள் குழந்தைக்குச் சொல்லக்கூடாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
சமூக ஊடக செட்டிங்ஸ் :
யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களிலும் parental control விருப்பம் உள்ளது. சமூக ஊடகப் பயன்பாடுகளில் parental control-ஐ இயக்கினால், குழந்தைகளின் செயல்பாடுகளை எளிதாகக் கண்காணித்து, தவறான விஷயங்களைப் பார்ப்பதைத் தடுக்கலாம்.
தனி மின்னஞ்சல் ஐடி அவசியம் : பல நேரங்களில், வசதிக்காக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சொந்த மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி அனைத்து பயன்பாடுகளையும் இயக்க அனுமதிக்கின்றனர். ஆனால், குழந்தைகளுக்கான தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடியை உருவாக்குவது பாதுகாப்பான முறையாகும். இதன் மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறான விளம்பரங்களில் இருந்து விலக்கி வைப்பது மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளின் இணைய செயல்பாட்டை எளிதாக கண்காணிக்க முடியும்.
இன்டர்நெட் பாதுகாப்பு குறிப்புகள் :
உங்கள் குழந்தைக்கு செல்போனைக் கொடுத்தால், இன்டர்நெட் பாதுகாப்பு பற்றி அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருங்கள். வைரஸ், மால்வேர், சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் கட்டணங்கள் தொடர்பான மோசடிகள் குறித்து குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துங்கள். மோசடியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றியும் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
No comments