கலங்க வச்சிட்டாங்களே.. அரசு ஊழியர்களுக்கு இடியாக வந்து இறங்கிய செய்தி.. பட்ஜெட்டில் ஷாக் மேல ஷாக்
நாடு முழுக்க இருக்கும் அரசு ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு கெட்ட செய்தி 2024 பட்ஜெட்டில் வந்துள்ளது.
2024 பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று நேற்று வெளியானது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2024ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்றன. புதிய பென்சன் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக இதில் முன்பு கூறப்பட்டது. ஆனால் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது பல லட்சம் ஊழியர்களின் பல வருட கோரிக்கை.. ஆனால் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு உடைந்துள்ளது. புதிய முறையே மாற்றம் இன்றி தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று பட்ஜெட்டில் 2024 பட்ஜெட்டில் சிறார்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம், என்பிஎஸ் வாத்சல்யா எனப் பெயரிடப்பட்டுள்ளது. குழந்தை வயது வந்தவுடன், அதாவது 18 வயதை எட்டியதும் இந்தத் திட்டம் சாதாரண NPS ஆக மாற்றப்படும். பெற்றோர்கள் இப்போது தங்கள் குழந்தைகளுக்கு ஓய்வூதியத்தைத் திட்டமிடலாம். என்.பி.எஸ் வாத்சல்யா திட்டத்தின் கீழ், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பங்களிக்க முடியும். என்.பி.எஸ் வாத்சல்யா என்பது சிறார்களுக்கான திட்டமாகும், இதில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் பங்களிக்க முடியும். குழந்தை 18 வயதை அடைந்தவுடன் இந்த திட்டம் வழக்கமான NPS ஆக மாற்றப்படும். இதை தவிர பென்சன் தொடர்பான எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வூதிய சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) ரத்து செய்தனர். ஏப்ரல் 2004 க்குப் பிறகு அந்தந்தப் பணியில் சேர்ந்த அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் புதிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ளனர். அப்போதிருந்து, பழைய முறையை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வருகின்றன. 2004 ஆம் ஆண்டுக்கு முன் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளதால், அவர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
பழைய முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு கடந்த காலங்களில் பலமுறை கூறியுள்ளது. ஆனால், இப்போது தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக உத்தரவாதம் அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது கடைசி மாதம் நீங்கள் உங்கள் பணியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினால்.. உங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.
இது பழைய ஓய்வூதிய திட்டத்தின் ஒரு முறையாகும். அதை புதிய ஓய்வூதிய திட்டத்தில் கொண்டு வர உள்ளனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 2024ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டில் புதிய பென்சன் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறப்பட்டது..
பென்ஷன் மாற்றம்: பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தை சில மாற்றங்களுடன் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது பல லட்சம் ஊழியர்களின் பல வருட கோரிக்கை.. ஆனால் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு உடைந்துள்ளது. புதிய முறையே மாற்றம் இன்றி தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. .
No comments