Breaking News

உடனே விண்ணப்பீங்க..! 2438 காலிப்பணியிடங்கள்.. தேர்வு கிடையாது..!

 


தெற்கு ரயில்வேயில் 2,438 பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணியிடங்கள் விவரம்:

1. கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் - 1337 பதவிகள்

2. மத்திய பணிமனை, கோல்டன் ராக் - 379

3. சிக்னல் & டெலிகாம் பணிமனை, போதனூர் - 722 என மொத்தம் 2,438 பயிற்சி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வி தகுதி: ஐடிஐ, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படித்தவர்கள் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.. பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். அதாவது ஃபிட்டர் பணியிடத்திற்கு குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ ஆய்வக டெக்னிஷியன் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியில் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: 15 வயதுக்கு மேற்பட்டவர்களும் 24 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். பிர்ஷர்ஸ் என்றால் அதிபட்ச வயது வரம்பு 22 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

பயிற்சி காலம்:

பிரஷர்ஸ்கள் (Freshers)

பிட்டர் பணி: 2 ஆண்டுகள் பயிற்சி வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்): ஒரு ஆண்டு 3 மாதங்கள் மெடிக்கல் லேப் டெக்னிஷயன்ஸ்: ஒரு ஆண்டு 3 மாதங்கள் முன்னாள் ஐடிஐ கேட்டகிரி / டெக்னிகல் தகுதி பெற்றிருந்தால் பயிற்சி காலம் 1 ஆண்டு ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரயில்வே வாரிய விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தெற்கு ரயில்வே இணையதளத்திற்கு சென்று தேவையான விவரங்களை அளித்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 12.08. 2024 கடைசி நாளாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து அறிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1721574353840-ActApprenticesNotify202425.pdf செய்யவும்.

No comments