Breaking News

DA : அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் குட் நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியன புதிய தகவல்!

 


கவிலைப்படி உயர்வு : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அதாவது 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.

அதன்படி, ஜனவரி மாதத்தில் ஒரு முறையும், பிறகு 6 மாதங்கள் கழித்தும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த ஆண்டுக்கான முதல் 6 மாதங்களுக்கான ஆகவிலைப்படி உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 2வது அகவிலைப்படி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கபப்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அகவிலைப்படி 4% உயர்ந்தால் அடிப்படை ஊதியம் எவ்வளவு உயரும்

ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியில் மேலும் 4% உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவைலைப்படி சதவீதம் உயர்ந்தால் 7வது ஊதியக் குழுவின் படி அடிப்படை ஊதியம் பெறுவோருக்கு அடிப்படி ஊதியம் உயர வாய்ப்புள்ளது. அதாவது, அகவிலைப்படியில் 4% உயர்த்தப்பட்டால் ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறுவோருக்கு மாதம் ரூ. 720 கூடுதலாக வழங்கப்படும். அதன்படி அடிப்படை ஊதியம் ரூ.18,720 ஆக உயர்வது மட்டுமன்றி ஆண்டுக்கு ரூ.8,640 கூடுதலாக கிடைக்கும். இதேபோல ரூ.20,000 அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு ரூ.800 உயர்த்தி வழங்கப்படும். அதன்படி, அடிப்படை ஊதியம் ரூ.20,800 ஆக உயர்வது மட்டுமன்றி, ஆண்டுக்கு ரூ.9,600 கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகது.

ரூ.20,000-க்கு மேல் அடிப்படி ஊதியம் இருந்தால் எவ்வளவு கிடைக்கும்

ரூ.25,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும். இதன் மூலம் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக உயர்வது மட்டுமன்றி, ஆண்டுக்கு ரூ.12,000 கூடுதலாக கிடைக்கும். இதேபோல ரூ.30,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.1,200 உயர்த்தப்பட்டு அடிப்படை ரூ.31,200 ஆக இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.14,400 கூடுதலாக கிடைக்கும். இதேபோல அடிப்படை ஊதியம் ரூ.40,000-க்கு மேல் இருந்தால் ரூ.1,600 உயர்ந்து அடிப்படை ஊதியம் ரூ.41.600 ஆக இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.19,200 கூடுதலாக கிடைக்கும். இவ்வாரு ரூ.1 லட்சம் வரை அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ரூ.43,200 வரை ஆண்டுக்கு கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கபடுகிறது குறிப்பிடத்தக்கது.

No comments