Breaking News

சுகர் லெவலை கட்டுப்படுத்த பப்பாளி உதவுமா... சாப்பிடும் சரியான முறை..!

 


நீரழிவு நோயாளிகள், சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கண்பார்வை குறைதல், சிறுநீரக பாதிப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

இனிப்பு சுவை கொண்ட பழங்கள் சாப்பிடலாமா வேண்டாமா என்பது குறித்த குழப்பம் எப்போதுமே, சர்க்கரை நோயாளிகள் மத்தியில் காணப்படும். பழங்களில் இருப்பது குளூக்கோஸ் அல்ல.. ப்ரூட்டோஸ் தான் உள்ளது. இதனால் பாதிப்பு அதிகம் இல்லை என்று கூறப்பட்டாலும், பழங்களை சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை என்று சுகாதார வல்லுனர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் பப்பாளி பழங்கள், நீரழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்குமா?, எந்த அளவிற்கு சாப்பிடலாம் என்பது குறித்த குழப்பங்கள் பலருக்கு இருக்கலாம்.

பப்பாளி பழத்தைப் பொறுத்தவரை, அதன் கிளைசிமிக் குறியீடு மிகவும் குறைவு என்பதால் அதனை நீரழிவு நோயாளிகள் தாராளமாக உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. பப்பாளியின் கிளைசெமி குறியீடு 60 என்ற அளவில் உள்ளது. இதனால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பப்பாளி உதவும் என்று கூறுகின்றனர் வல்லுனர்கள்.

பப்பாளியில் உள்ள சத்துக்கள்

பப்பாளையில் இயற்கை ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆன பிளவர் நாயுடுகள் உள்ளன. இவர் ரத்த சர்க்கரை அளவை சீராக உதவுகிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பல தற்கால பப்பாளியில் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதோடு, நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது. இதனால் வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதால், நீரழிவு நோயாளிகளுக்கு பசியை கட்டுப்படுத்த உதவும். பப்பாளியில் உள்ள பொட்டாசியம் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இதய ஆரோக்கியத்தை காக்கின்றன. மேலும் உடலில் சேரும் நச்சுக்களை இயற்கையான முறையில் நீக்க உதவுகின்றன.

ஒரு நாளைக்கு எந்த அளவு பப்பாளி பழம் சாப்பிடலாம்

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அதனால் பப்பாளி பழத்தில் ஆரோக்கிய நலன்கள் மித மிஞ்சிய அளவில் இருந்தாலும் அளவோடு தான் உண்ண வேண்டும். ஒரு நாளைக்கு 200 கிராம் முதல் 250 கிராம் வரையிலான பப்பாளியை உட்கொள்வது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் தினமும் சாப்பிடுவதை தவிர்க்கலாம். தினமும் சாப்பிட வேண்டும் என்றால் மேலே குறிப்பிட்ட அளவை பாதியாக குறைத்துக் கொள்ளலாம்.

பப்பாளி பழத்தின் பிற நன்மைகள்

நார்ச்சத்து நிறைந்த பப்பாளி செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. பப்பாளியில் உள்ள காபிக் அமிலம் மயில் செட்டின் போன்ற ஆக்சன் ஏற்றங்கள் மற்றும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் இளமையாக இருக்க உதவுகின்றன. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பப்பாளி ஒரு வரப் பிரசாதம் எனலாம். அத வயிற்றில் பப்பாளியை உட்கொள்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று ஆரோக்கிய வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

No comments