"ரூ.15 லட்சம் கடன்". அதுவும் குறைந்த வட்டியில்.. தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா.?
தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார கழகம் வாயிலாக தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதனால் இவர்கள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய உதவியாக இருக்கிறது. இதில் ஒருவர் சுய உதவிக் குழு உறுப்பினராக இருந்தால் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
அதுவே குழு என்றால் 6% வட்டியில் ரூபாய் 15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக உள்ள பால் உற்பத்தியாளருக்கு 7% வட்டி விதத்தில் ரூபாய் 60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக நேரில் விண்ணப்பிக்க வருகிறவர்கள் ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் தேவையான ஆவண நகல்களுடன் செல்லவும். இந்த கடனுதவியைப் பெற குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே கடன் உதவி பெற முடியும்.
No comments