இது தெரியுமா ?நம் முன்னோர்கள் இந்த இலையை தான் முதலுதவி பொருளாக பயன்படுத்தி வந்தார்கள்..!
பாரம்பரிய மருத்துவத்தில், "கண்டம்" என்றால் "தொண்டை" என்று அர்த்தம்.. அதேபோல "முள்" என்றும் அர்த்தம்.
தொண்டையில் நமக்கு எந்த பாதிப்புகள் வந்தாலும், அதற்கு நிவாரணமாக இருப்பது
இந்த மூலிகைதான். அதனால்தான், இதற்கு கண்டங்கத்திரி என்று பெயர் வந்ததாக
சொல்கிறார்கள்.
இந்த மூலிகையின் இலைகள், பழங்கள், தண்டுகள், விதைகள், பட்டைகள், வேர்கள் என அத்தனை பாகங்களுமே நமக்கு நன்மை தரக்கூடியவை.. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களை அழிப்பதில் இந்த கண்டங்கத்திரிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு..
இதில் பெருமளவு உதவுவது இந்த இலைகள்தான். குறிப்பாக, நுரையீரல் மற்றும் சுவாச பிரச்சனைகள் எதுவானாலும், இந்த இலையைதான் அதிகம் பயன்படுத்துவார்கள். இதன் இலையுடன், தூதுவளை, ஆடாதொடை இலைகளையும் சேர்த்து, வெயிலில் காய வைத்து, இடித்து பவுடராக்கி வைத்து கொள்வார்கள்.. இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிடும்போது, நாள் பட்ட கடுங்காய்ச்சல் முதல் சுவாச பிரச்சனைவரை தீரும்.
அல்லது கண்டங்கத்தரி இலை + துளசி இலை தூதுவளை இலை என 3 இலைகளையும் தண்ணீரில் போட்டு சுண்ட காய்ச்சவேண்டும். ஒரு பங்கு தண்ணீர், அரை பங்காகும் அளவு சுண்ட காய்ச்சி, வடிகட்டு குடித்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற பிரச்சனைகள் குணமாகும். இலையை பொடியாக நறுக்கி, நல்லெண்ணெய்யுடன் சேர்த்து குழைத்து, மார்பில் பூசிவந்தால், வாத நோய்கள் பறந்துவிடும். சாப்பிட்டு வர வேண்டும்.பொடுகு தொல்லைக்கும் இந்த இலையின் சாறுதான் பயன்படும்.. தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன், கண்டங்கத்திரி இலைச்சாற்றையும் சேர்த்து தலைக்கு தேய்ப்பார்கள்.
சருமபிரச்சனைகளுக்கு இந்த கண்டங்கத்திரி நல்ல தீர்வாகும்.. சொரி, சிரங்கு, அலர்ஜி என எதுவந்தாலும், இந்த இலையே அதற்கும் தீர்வாகிறது.. அவ்வளவுகு ஏன்? வியர்வை பிரச்சனை ஏற்பட்டாலும்கூட, தேங்காய் எண்ணெயில் இந்த இலையைப் போட்டு, காய்ச்சி உடலில் தடவினால், வியர்வை பிரச்சனை நீங்கும்.. ரத்தத்தில் அதிகரித்திருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் குணமுடையது இந்த கண்டங்கத்திரி..
ஆனால், குழந்தைகளுக்கு இருமல், மார்புச்சளி வந்தால், இந்த கண்டங்கத்திரியின் காய், பழத்தை பறித்து நசுக்கி, தேனுடன் கலந்து தருவார்கள்.. நுரையீரல் புற்று செல்களுக்கு எதிராக செயல்படுகிறதாம் இந்த கண்டங்கத்திரி பழங்கள்.. இந்த கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்து சுருட்டி, புகைபோல பிடித்தால், பல்வலி நீங்கும்.. பற்களில் உள்ள கிருமிகளும் நீங்கும். அல்லது கண்டங்கத்திரி மூலிகையை எரித்து சாம்பலாக்கி, அதைவைத்தும் சிலர் பல் துலக்குவார்கள். இதனால் ஈறுகள் பலப்படுவதுடன், பல் சம்பந்தமான கோளாறுகளும் அண்டாது.
பாதவெடிப்பு இருந்தால், கண்டங்கத்திரி இலையை பிழிந்து சாறு எடுத்து, ஆலிவ் எண்ணெய் கலந்து பாதத்தில் பூசினால் பலன் கிடைக்கும்.. அல்லது கண்டங்கத்திரி இலை சாறில், ஆளி விதை எண்ணெயையும் சேர்த்து பாத வெடிப்புகளில் பூசி வரலாம்.. கண்டங்கத்திரி இலை சாறு தினமும் ஒரு ஸ்பூன் குடித்து வந்தாலே, சிறுநீர் தாராளமாக பிரியும்.. சிறுநீரகத்திலுள்ள கற்களும் மெல்ல மெல்ல கரையும்.. இப்படி பலவித நன்மைகளை கண்டங்கத்திரி தந்தாலும், பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல், தனிப்பட்ட முறையில் சாப்பிடக்கூடாது.

No comments