இந்தியாவின் தலை சிறந்த ஸ்கூல்.. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா..? டாப் 10 லிஸ்ட் இதோ.!!
இந்திய தரவரிசை கட்டமைப்பு பணி அல்லது ஐஏஆர்எப் என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் நாட்டிலுள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டிலும் இந்தியாவிலுள்ள சிறந்த பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் முதல் இடத்தில் கர்நாடகவை சேர்ந்த டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளி இடம்பெற்றுள்ளது. அதன்பிறகு 2-வது இடத்தில் மும்பையைச் சேர்ந்த பாம்பே ஸ்காட்டிஷ் என்னும் பள்ளி இடம் பெற்றுள்ளது.
இதனையடுத்து 3-வது இடத்தில் மும்பையின் கதீட்ரல் அண்ட் ஜான் கோனான் எனும் பள்ளி இடம்பிடித்துள்ளது. 4-வது இடத்தில் மும்பையைச் சேர்ந்த செயின்ட் மேரிஸ் எனும் பள்ளி தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ராஜஸ்தானை சேர்ந்த செயின்ட் சேவியர்ஸ் சீனியர் செகண்டரி என்னும் பள்ளி 5-ம் இடத்தை இடம்பெற்றுள்ளது. 6-வது இடத்தில் டெல்லியைச் சேர்ந்த செயின்ட் சேவியர்ஸ் சீனியர் செகண்டரி பள்ளி இடம்பெற்றுள்ளது. அதன்பின் கர்நாடகாவை சேர்ந்த லிட்டில் ராக் இந்தியன் பள்ளி 7-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
8-வது இடத்தில் மும்பையைச் சேர்ந்த ஆர்.என் போடார் பள்ளி இடம் பிடித்துள்ளது. பின்பு டெல்லியைச் சேர்ந்த சல்வான் பப்ளிக் பள்ளி 9-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் மும்பையைச் சேர்ந்த திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி 10-வது இடத்தில் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு பள்ளியும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments