Breaking News

பெண் குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமிப்பவரா நீங்கள் ? 15 வருடத்தில் ரூ. 47 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்..!

 

ரசு வழங்கும் பிரபலமான சிறுசேமிப்புத் திட்டமான இது, பெண் பிள்ளைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

சுகன்யா சம்ரிதி யோஜனா தமிழில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் என அழைக்கப்பட்டு வருகிறது.பெண் பிள்ளைகளுக்கு 10 வயது எட்டும் போது, அவரது பாதுகாவலர்கள் SSY கணக்கை திறக்கலாம். ஆனால், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறப்பதற்கான அனுமதி இல்லை.

பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் ரூ.1000 வைப்புத்தொகையுடன் இந்த விவரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் சுகன்யா சம்ரித்தி கணக்கை தபால் நிலையத்திலோ அல்லது RBI அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலோ தொடங்கலாம். இத்திட்டம் திறக்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.

ஒரு வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே அதிகபட்சமாக இந்த திட்டத்தின் கீழ் கணக்கை திறக்கலாம். தற்போது சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் முதலீடு செய்வதற்கு 8.20 சதவீத அளவில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒருவர் 250 ரூபாயையும், அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாயையும் முதலீடு செய்யலாம். வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 (11A) இன் கீழ் இத்திட்டத்திற்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

உங்கள் பெண் குழந்தைக்கு 9 வயதாக இருக்கும் போது, ​​நீங்கள் ஒரு SSY கணக்கைத் திறந்தால், 15 ஆண்டுகளுக்கு, அதாவது 24 வயதை அடையும் வரை அந்தக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சியடையும். அதாவது, பெண் குழந்தைக்கு 9 வயதாக இருக்கும்போது கணக்கு தொடங்கப்பட்டால், கணக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும், அதாவது அந்த பெண்ணுக்கு 30 வயதை அடையும் போது முதிர்வு தொகையை பெறலாம்.

SSY திட்டத்தில் ஒருவர் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாயை முதலீடு செய்து வந்தால், ஒரு வருடத்தில் மொத்தமாக 60,000 ரூபாயை முதலீடு செய்யப்பட்டிருக்கும். இந்த திட்டத்திற்கு 8.2% என்ற கூட்டு வட்டியை வருடத்திற்கு வழங்குவதால், 15 வருடத்தில் ரூ. 9 லட்சம் முதலீடாக இருக்கும். மேலும் இதற்கான வட்டி 18.92 லட்சம் ரூபாய் என்ற கணக்கில், மொத்த மெச்சூரிட்டி தொகை ரூ. 27.92 லட்சம் கைக்கு கிடைக்கும்.

மேலும், SSY திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஒருவர் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்யும் போது, 15 வருடங்களுக்கு மொத்தமாக 15 லட்சம் ரூபாயை முதலீடு செய்யப்பட்டு இருக்கும். 8.2% விகிதத்தில் இதற்கான வட்டி 31.53 லட்சம் ஆக இருக்கும். இதனையடுத்து மெச்சூரிட்டியின் போது ரூ. 46.53 லட்சம் கிடைக்கும்.

ஒரு SSY கணக்கை பெண் குழந்தைக்கு 18 வயதை அடையும் வரை மட்டுமே பாதுகாவலர் அல்லது அவரது பெற்றோரால் தொடர முடியும், பதினெட்டு வயதை அடைந்த பிறகு, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கு வைத்திருக்கும் பெண்ணே அந்த கணக்கை நிர்வகிக்கலாம். அதேப்போல கணக்கு வைத்திருப்பவரின் கல்வி நோக்கத்திற்காக SSY கணக்கில் உள்ள தொகையில் 50% வரை திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்த திட்டத்தின் கீழ் கடன் வசதி கிடையாது.

21 ஆண்டுகள் முடிவதற்குள் SSY கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கு கணக்கு வைத்திருப்பவர் திருமணத்தின் காரணமாக அத்தகைய கோரிக்கையுடன் விண்ணப்பித்தால் அனுமதிக்கப்படும். கணக்கு வைத்திருக்கும் பெண்ணிற்கு திருமணம் நடந்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு அல்லது திருமணமான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் கணக்கை முடித்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்கு பிறகு கணக்கை முடிக்க அனுமதிக்கப்படாது.

No comments