Breaking News

செல்போன் வெடித்து சிதறி உயிரிழந்த இளைஞர். நீங்களும் இந்த தவறை பண்ணாதீங்க.!!!

 


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ரஜினி என்பவரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென்று வெடித்து சிதறியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பைக்கில் சென்ற மற்றொரு இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சமீப காலமாகவே செல்போன் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேட்டரி பழுதாகி வீங்கிய நிலையில் இருந்தால் செல்போன் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். செல்போனை அதிக நேரம் பயன்படுத்தும் போது சூடாகி வெடிக்கலாம். சார்ஜ் செய்தபடி செல்போனை பயன்படுத்தும் போது செயல் திறன் பிரச்சனையால் சூடாகி வெடிக்கலாம். செல்போன் நிறுவனம் அறிவுறுத்தியதை விட அதிக வாட்ஸ் கொண்ட சார்ஜரை பயன்படுத்த வேண்டாம். செல்போனை நேரடியாக சூரிய ஒளி படும்படி வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments