Breaking News

ANGEDCO நேரடி எச்சரிக்கை: ஆன்லைனில் EB பில் கட்ட போறிங்களா? இது தெரியாம கட்டணம் செலுத்தாதீங்க.. உடனே கவனிக்க

 

ங்கள் மின் இணைப்பு கணக்கிற்கு (EB connection account) உரிய மின் கட்டணத்தை (electricity bill) நீங்கள் ஆன்லைன் மூலம் செலுத்தும் நபரா?

அப்படியானால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள இந்த முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு உங்களுக்கானது தான் மக்களே. உங்கள் EB பில் கட்டணத்தை ஆன்லைனில் (EB bill online payment) செலுத்துவதற்கு முன்பு, கண்டிப்பாக இந்த பதிவை நீங்கள் முழுமையாக படித்துவிடுவது மிகவும் பாதுகாப்பானது. டான்கெட்க்கோ வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி என்ன? இதோ முழு விபரம்.

தமிழ்நாட்டில் (Tamil Nadu) உள்ள பொதுமக்களில் ஏராளமானோர் இப்போது அவர்களுடைய மின் கட்டணத்தை ஆன்லைன் (Online EB bill Payment) சேவை மூலம் செலுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு, பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஒருவர் பின் ஒருவராக மின் நிலையங்களில் அவர்களுடைய மின்சார கட்டணங்களை செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் சிலர் நேரடியாக மின் நிலையம் சென்று அவர்களுடைய மின் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.

ஆன்லைனில் மூலம் EB பில் செலுத்தும் நபர்களுக்கு TANGEDCO விடுத்த எச்சரிக்கை:

இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. இன்னும் சில மக்களிடம் ஆன்லைனில் கட்டணம் செலுத்த தேவையான ஸ்மார்ட்போன்கள் (Smartphone) இல்லை. இன்னும் சிலருக்கு ஆன்லைனில் எப்படி மின்சார கட்டணத்தை செலுத்துவது என்ற செயல்முறை தெரியவில்லை. இன்னும் சிலர் ஆன்லைன் மோசடிகளுக்கு பயந்து, பாதுகாப்பு நலன் (security details) கருதி நான் நேரிலேயே சென்று மின் கட்டணத்தை செலுத்திவிடுகிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். இருப்பினும் பலர் ஆன்லைன் மூலமே கட்டணத்தை செலுத்துகிறார்கள்.

நேற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) அதன் எக்ஸ் (X) பக்கம் வழியாக புதிய எச்சரிக்கை செய்தியை பொதுமக்களுக்காகவும், மின்சார பயனாளர்களுக்காகவும் வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மீண்டும் போலி மின்சார மின் கட்டண SMS மூலம் (Fake EB bill payment online SMS alert), வாடிக்கையாளர்களை மோசடி செய்யும் ஸ்கேம் (Scam) தொடர்ந்து வருகிறதென்று Tangedco எச்சரித்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி எச்சரித்துள்ளது.

குறிப்பாக, ''மின்சார கட்டணம் செலுத்தப்படாமல் இருக்கிறது, உங்கள் மின்சார இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும். உடனே கட்டணத்தை செலுத்த இந்த லிங்க் (link) ஐ கிளிக் செய்யவும்'' என்று உங்கள் மொபைல் எண்ணிற்கு (Mobile number) ஏதேனும் எஸ்எம்எஸ் வந்தால், அவற்றை உடனே புறக்கணிக்கவும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எச்சரித்துள்ளது. மின் கட்டணம் தொடர்பான போலி SMS-கள் மீண்டும் உலா வருவத்தினால் கவனமுடன் இருக்கும்படி அறிவுரைக்கப்படுகிறது.

இது தெரியாம கட்டணம் செலுத்தாதீங்க.. குறிப்பாக SMS இல் இருக்கும் லிங்க்கை தொடாதீங்க.. உஷார்:

இந்த போலி எஸ்எம்எஸ் உடன் வரும் லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் மின் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என்ற அறிவுரையுடன் இந்த போலி எஸ்எம்எஸ் (EB bill SMS scam) உலா வருகிறது. மெசேஜ்ஜில் இருக்கும் லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தும் பொதுமக்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி Tangedco புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த போலி எஸ்எம்எஸ் மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு, பொதுமக்கள் SMS உடன் வரும் லிங்க்கை கிளிக் செய்யாமல் இருப்பது பாதுகாப்பானது. அதேபோல், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அவசர அழைப்பு எண்ணிற்கும் அழைப்பு கொடுக்காமல் இருப்பது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்பட்டுள்ளது. Tangedco-வின் அதிகாப்பூர்வ இணையதளம் வழியாக கட்டணம் செலுத்துவது பாதுகாப்பானது. உங்கள் சந்தேகங்களுக்கு Tangedco-வின் இலவச அழைப்பு எண் ஆன 1930 எண்ணை அழைக்கவும் (Tangedco free helpline number).

No comments