8-ம் வகுப்பு பாஸ் போதும்.. ரூ 70,000 வரை சம்பளம்.. காத்திருக்கும் வேலைவாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க
தமிழ்நாடு துணி நூல் துறையின் கீழ் இயங்கி வரும் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
என்னென்ன பணிகள் காலியாக உள்ளன, யார் விண்ணப்பிக்கலாம், எப்படி
விண்ணப்பிப்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
அலுவலக உதவியாளர்:
சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரைகாலியிடங்கள்: 07
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர்
சம்பளம்: மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரைகாலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுநர் பணியில் இரண்டு வருடம் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- பட்டியலினம் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு : 18 வயது முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள்.
- பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கு: 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் 34 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை https://tntextiles.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
துணிநூல் துறை,கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம்,
முதல் மற்றும் இரண்டாம் தளம்,
34, கதீட்ரல் தோட்ட சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034.
குறிப்பு:
முழுமையாக
பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும்
விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள்
மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
No comments