Breaking News

போஸ்ட் ஆபிஸின் சூப்பரான திட்டம்...மாதந்தோறும் ரூ.20,000 கிடைக்கும்..!

 


மூத்த குடிமக்கள் ஓய்வுபெற்ற பிறகு 60 வயதுக்கு மேல் தங்களின் வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக அஞ்சல் துறையால் பல சேமிப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் முக்கியமான சிறப்பு, 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம் என்பது தான்.. 60 வயதுக்கு மேற்பட்ட யாராக இருந்தாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். நீங்கள் 55 முதல் 60 வயதுக்குள் VRS-ன் கீழ் ஓய்வு பெறுபவர்கள் இந்தக் கணக்கையும் திறக்கலாம். வாழ்க்கை துணையுடன் இணைந்தும் இந்தக் கணக்கைத் திறக்கலாம்.

மூத்த குடிமக்கள் ஏதேனும் வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்குச் சென்று SCSS கணக்கைத் திறந்து இந்த திட்டத்தில் இணையலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 டெபாசிட் செய்து இந்த கணக்கை திறக்கலாம். அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரையிலும் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம்.

இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கும். ஒருவர் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் அவருக்கு வட்டி கிடைக்கும். அதாவது மாதந்தோறும் ரூ.20,000 வரை பெறலாம். மேலும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்யும் போது, ஒவ்வொரு மாதமும் ரூ.10,250 வரை பெறலாம்.

No comments