School Morning Prayer Activities - 29.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: அறிவு உடைமை
குறள் எண்:428
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
பொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
பழமொழி :
ஆண்டவர் எப்படியோ தொண்டரும் அப்படியே
Like God, like worshipper
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.
*என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.
பொன்மொழி :
"முடியாது" என்று நீங்கள் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவர் எங்கோ செய்து கொண்டிருக்கிறார். ----அப்துல் கலாம்
பொது அறிவு :
1. உருவத்தில் பெரிய தேனீயாக அழைக்கப்படுவது எது?
விடை: இராணித்தேனீ
2. இந்தியாவின் மிக உயரமான அருவி எது, எங்கு அமைந்துள்ளது?
விடை: சரவாதி ஆற்றின் (ஜோக் அருவி) கர்நாடகா
English words & meanings :
retard-தடு,
issue-பிரச்சனை
வேளாண்மையும் வாழ்வும் :
மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது, சீலியாயிக்,சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்கவல்லது, உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது, ரத்தத்தில் ஹீனமோக்ளோபின் அளவினை அதிகரிக்க உதவும் மேலும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
ஜூலை 29 இன்று
பன்னாட்டுப் புலி நாள்
பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.[1] இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது.[2] இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.
நீதிக்கதை
ஒருவரை உருவம் பார்த்து எடை போடக்கூடாது
அடர்ந்த காடு ஒன்றில் இருந்த குகையில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது.விலங்குகளை வேட்டையாடி வயிறு நிறைய இறைச்சியை சாப்பிட்டு விட்டு தன் குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.
அப்போது அந்த குகையின் ஒரு மூலையில் வசிக்கும் எலி ஒன்று சிங்கத்தின் உடலை ஒரு பாறை என்று எண்ணிக்கொண்டு, அதன் முதுகில் ஓடியாடி விளையாடியது. இதனால் சிங்கத்தின் தூக்கம் கெட்டது.
அது கண் விழித்து எலியை பிடித்துக் கொண்டது. பிறகு அது எலியை பார்த்து “சிறிய ஏலியே, நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது என் மீது ஏறி விளையாடி என் தூக்கத்தை நீ கலைத்து விட்டாய். உன்னை என்ன செய்கிறேன் பார்.
உன்னை என் வாயில் போட்டு மென்று விடுகிறேன்” என்றது. எலிக்கு பயத்தால் உடல் நடுங்கியது. அது தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சிங்கத்தை பார்த்து, “சிங்கராஜா, என்னை எதுவும் செய்து விடாதீர்கள். உங்கள் உடம்பை கல் என்று நினைத்து விளையாடிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என்னை தயவு செய்து மன்னித்தால், நான் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவுகிறேன்.” என்றது.
எலி பேசுவதை கேட்ட சிங்கம், கடகட என காடே அதிரும்படி சிரித்தது. அது எலியை பார்த்து, “எலியே, நீ பொடிப்பயல். சின்னஞ்சிறிய உடல் கொண்ட உன்னால் மலைபோல் தோற்றமும் கம்பீரமும் கொண்ட எனக்கு என்ன உதவி செய்ய முடியும்?”
நான் இப்பொழுது வயிறு நிறைய சாப்பிட்டு இருப்பதால், உன்னை ஒன்றும் செய்யாமல் விடுகிறேன். மேலும் அற்ப உருவம் கொண்ட உன்னை நான் சாப்பிடுவதால் எனக்கு தான் அவமானம். பிழைத்துப் போ, என்று கூறிவிட்டு எலியை விட்டது.
எலி தப்பித்தோம், பிழைத்தோம் என்று அதன் இடத்தில் சென்று புகுந்து கொண்டது. ஒரு நாள் சிங்கம் வழக்கம்போல் வேட்டையாட புறப்பட்டது. நெடு நேரமாகியும் அதற்கு இறை எதுவும் கிடைக்கவில்லை.
அது சோர்ந்து போனது. அது வேட்டையாடிக்கொண்டே நடுக்காற்றுக்கு வந்து விட்டது. அங்கே ஓரிடத்தில் வேட்டைக்காரர்கள் மிருகங்களை பிடிப்பதற்காக வலை விரித்து வைத்திருந்தனர்.
சிங்கம் அந்த விலைக்குள் சிக்கிக்கொண்டது. காடே அதிரும்படி கர்ஜித்தது, எவ்வளவோ முயன்றும் அதனால் அந்த வலையில் இருந்து வெளியே வர முடியவில்லை. அது மீண்டும் மீண்டும் கோபத்தால் கர்ச்சித்துக் கொண்டே இருந்தது.
இந்த சத்தம் வலையில் உறங்கிக் கொண்டிருந்த எலியின் காதில் விழுந்தது. அது உடனே விரைந்து ஓடி வந்தது. சிங்கம் சிக்கி இருந்த வலையை தன் கூர்மையான பற்களால் கடித்து சிங்கத்தை விடுவித்தது.
அப்பொழுது சிங்கம் எலியை பார்த்து, “எலியாரே, அன்று நீ என் தூக்கத்தை கலைத்த போது உன்னை கொல்லாமல் விட்டேன். அப்பொழுது நீ தக்க சமயத்தில் உதவுவதாக வாக்களித்தாய், அப்பொழுது நான் சிறிய உருவம் கொண்ட உன்னால் பெரிய உருவமும், கம்பீரமும் கொண்ட எனக்கு என்ன உதவி செய்துவிட முடியும்?” என்று ஏளனமாக பேசினேன்.
உருவத்தில் மிகவும் சிறியவனான நீதான் இன்று என் உயிரை காப்பாற்றி இருக்கிறாய். உன் உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். உன் உதவிக்கு நன்றி என்று கூறியது.
இன்றைய செய்திகள் - 29.07.202
🌸2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். 22 வயது ஆன மனு பாக்கர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
🌸பாம்பன் செங்குத்து தூக்குப் பாலப் பணிகள் நிறைவு: அக்டோபரில் ரயில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை.
🌸மேட்டூர் அணை 100 அடி நிரம்பியதை தொடர்ந்து, காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு.
🌸பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
🌸ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன.
🌸பழமையான பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இந்தியா - அமெரிக்கா இடையே கலாச்சார சொத்து ஒப்பந்தம்.
🌸பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் குரூப் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி.
🌸பாரீஸ் ஒலிம்பிக்: நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.
Today's Headlines
🌸Shooter Manu Pakar has won India's first medal at the 2024 Paris Olympics. 22-year-old Manu Bhakar has become the first Indian woman to win a medal in the Olympic shooting 10m air pistol category.
🌸Pampan Vertical Suspension Bridge Completed: steps are taken to start train service in October.
🌸 Water is being released from Mettur Dam for irrigation of Cauvery Delta followed by filling of Mettur Dam by 100ft
🌸Nirbhaya project work will be completed quickly for the safety of women, children: Tamil Nadu government informed the High Court.
🌸6 states including Gujarat have announced that retiring Agni veterans will be given reservation in government jobs in their states.
🌸India-US Cultural Property Treaty is signed to Prevent Smuggling of Ancient Artifacts
🌸Badminton — in women's singles category Indian player PV Sindhu won the first round in Paris Olympic series.
🌸Paris Olympics: Indian men's hockey team defeated New Zealan
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments