மக்களே உஷார்..! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்..!
வாகனங்களிடம் டோல் கட்டணம் வசூலிப்பதற்கு ஃபாஸ்டேக் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக்கிற்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது.
புதிய வாகனங்கள் வாங்கி 90 நாட்களுக்குள் ஃபாஸ்டேக் அப்டேட் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், வாகனங்களின் பதிவு எண், சேஸி எண் ஆகியவை கட்டாயமாக ஃபாஸ்டேக் உடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், மொபைல் எண்ணுடன் ஃபாஸ்டேக் இணைக்கப்பட வேண்டும்.
உயரப்போகும் காலணிகள் விலை
BIS விதிமுறைகள் ஆகஸ்ட் 1, 2024 முதல் அமலுக்கு வரும்.அமலுக்கு வரும் தரக்கட்டுப்பாட்டு உத்தரவின்படி, காலணி உற்பத்தியாளர்கள் ஐஎஸ் 6721, ஐஎஸ் 10702 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த திருத்தப்பட்ட தரங்களின்படி, ரெக்சின், இன்சோல் மற்றும் லைனிங் போன்ற காலணிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் ரசாயனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
காலணிகளின் வெளிப்புறப் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருள் தேய்ந்து போகாது, நீண்ட காலம் நீடிக்கும் என்று தரப் பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல வெளிப்புறப் பகுதியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பொருளின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே விதிமுறையாகும். வாடிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில், நீண்ட காலம் நீடிக்கும் பொருட்களை வழங்குவதற்காக இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய தரநிலைகள் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செலவுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காலணி விலையும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனையாளர்கள் தங்களிடம் பழைய ஸ்டாக் அதிகமாக இருந்தால் தொடர்ந்து விற்பனை செய்யலாம், ஆனால் அந்த விவரங்களை பிஐஎஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஆண்டு வருவாய் ரூ.50 கோடிக்கும் குறைவான உற்பத்தியாளர்களுக்கு புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
HDFC கிரெடிட் கார்ட்
ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல், வாடகை, எரிபொருள் மற்றும் பிற பயன்பாட்டு
கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களில் மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளன.PayTM, CRED, MobiKwik, Cheq மூலம் செய்யப்படும் வாடகை
பரிவர்த்தனைகளுக்கு 1% கட்டணம் விதிக்கப்படும். இந்த கட்டணம் ஒரு
பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.3000 ஆகும்.
ரூ.50,000-க்கும்
குறைவான தொகையுள்ள பரிவர்த்தனைகள் இதனால் பாதிக்கப்படாது. ஆனால் அதற்கு
மேற்பட்ட தொகைக்கு 1 % கட்டணம் விதிக்கப்படும். அதிகபட்ச கட்டணமாக ரூ.3000
வரை இருக்கலாம். காப்பீடு தொடர்பான பரிவர்த்தனைகள் இந்த புதிய
கட்டணங்களுக்கு உட்படாது.
CRED மற்றும் PayTM மூலம் செய்யப்படும்
கல்வி கட்டணங்களுக்கு 1 % கட்டணம் விதிக்கப்படும். கல்வி நிறுவனங்களின்
வலைத்தளங்கள் அல்லது POS இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் கட்டணங்களுக்கு
எந்தவித கட்டணமும் இல்லை. சர்வதேச கல்வி கட்டணங்களுக்கு இந்தப் புதிய
கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அனைத்து
கிராஸ்-கரன்சி பரிவர்த்தனைகளுக்கும் 3.5% மார்க்அப் கட்டணத்தை HDFC பேங்க்
விதிக்கவுள்ளது. வெளிநாட்டில் அடிக்கடி பொருட்களை வாங்கி பணம் செலுத்தும்
வாடிக்கையாளர்களை இது பாதிக்கும்.
Easy-EMI வசதியைப்
பயன்படுத்துபவர்களுக்கு, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்கும்
பொருட்களை EMI-களாக மாற்றுவதற்கு, 299 ரூபாய் வரை செயலாக்கக் கட்டணம்
வசூலிக்கப்படும்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்குமா? குறையுமா?
எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பலரது குடும்பங்களின் செலவில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துவிட்டால் அது மாத பட்ஜெட்டில் பாதிப்பை உண்டாக்கும்.ஜூலை மாதம், 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை அரசாங்கம் குறைத்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதிகளை மாற்றும் கூகுள் மேப்ஸ் :
கூகுள் மேப்ஸ் இந்தியாவில் அதன் விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த விதிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது சேவைகளுக்கான கட்டணங்களை 70 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது பயனர்களிடத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
No comments