Breaking News

டெபிட் கார்டு இல்லாமல் ATMஇல் பணம் எடுக்கலாம். எப்படி தெரியுமா?. இதோ விவரம்.!!!

 

ம்மில் பலர் கையில் டெபிட் கார்டை எடுக்காமல் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களுக்கு சென்று அனுபவங்களை கொண்டு இருக்கலாம்.

இப்போது ஏடிஎம் மையங்களில் டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா வழங்குகின்றது

இதன் மூலம் பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியும். வங்கிகள் இந்த அம்சத்தை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி உட்பட இன்னும் சில வங்கிகளில் உள்ளது. பயனர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் யுபிஐ சேவையை வழங்கும் அப்ளிகேஷன்களை இதற்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தின் திரையில் UPI cash withdrawal என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான தொகையை உள்ளிடவும்.

பிறகு ஏடிஎம் திரையில் க்யூ ஆர் கோடு காண்பிக்கப்படும்.

அதை உங்கள் போனில் உள்ள யு பி ஐ செயலி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

நீங்கள் பயன்படுத்தும் யுபிஐ செயலியின் பின் நம்பரை உள்ளிட வேண்டும்.

தற்போது நீங்கள் தேர்வு செய்த பணத்தை ஏடிஎம் இயந்திரம் உங்களுக்கு வழங்கும்.

No comments