Breaking News

இன்று 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை | இந்த 7 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!

 


சென்னை உட்பட பல மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16.10.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று அக்டோபர் 16ம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு இடங்களில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் இன்று டெல்டா மாவட்டங்களிலும், நாளை ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று 13 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை நீடிக்கும். ஒரு சில பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன் தினம் இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

ரெட் அலர்ட் : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்தப் பகுதிகளில் மழை படிப்படியாக அதிகரிக்கும்.

ஆரஞ்சு அலர்ட் : வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை

மஞ்சள் அலர்ட் : திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை

No comments