Breaking News

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வருமானமாக பெறலாம்..!

 


மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தை தபால் நிலையம் செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இத்திட்டத்தை முழுக்க முழுக்க அரசே செயல்படுத்தி வருகிறது.

சரியான ஒய்வூதியத்திற்காக திட்டமிட வேண்டிய அவசியமான ஒன்று. மூத்த குடிமக்க சேமிப்பு திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வருமானமாக பெறலாம். ஐந்து ஆண்டுகளுக்கு இந்த வருமானம் தொடர்ச்சியாக கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஓய்வுபெற்றவர்கள் மட்டுமல்லாமல் வி.ஆர்.எஸ் எடுத்தவர்களும் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். போஸ் ஆபீஸ் இந்த சேமிப்பு திட்டத்திற்கு 8.2% வரை வட்டி கொடுத்து வருகிறது. ரூ. 15 லட்சம் வரை டெபாசிட் செய்யும் போது ஒவ்வொரு மாதமும் இத்திட்டத்தின் வாயிலாக ரூ.10,250 வருமானமாக பெறலாம்.

அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்யும் போது, ஆண்டுக்கு ரூ.2,46,000 வட்டி கிடைக்கும். இதன் மூலமாக மாதந்தோறும் வருமானமாக ரூ.20,500 தொகையை பெறலாம். ரூ.61,500 வருமானமாக காலாண்டிற்கு கிடைக்கும். SCSS கணக்கு மூத்த குடிமக்கள் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இத்திட்டம் 5 ஆண்டுகள் முதிர்வடையும். இதில் ஒருமுறை மட்டும் பணத்தை முதலீடு செய்யும் வசதி உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமகன் யாராக இருந்தாலும் SCSS திட்டத்தில் மொத்தப் பணத்தையும் டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் டெபாசிட் செய்யும் இந்த திட்டத்தை ஆரம்பிக்ககலாம். ஒவ்வொரு மாதமும் பணம் அல்லது வட்டியை டெபாசிட் செய்யும் தொகையை பொறுத்து பெறலாம். பிரிவு 80C ன் படி SCSS திட்டத்தில் வரி விலக்கும் உண்டு. தபால் நிலையத்திற்கு சென்று SCSS கணக்கை திறந்து இத்திட்டத்தில் இணையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments