Breaking News

பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் செய்த செயல்..!! இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

 


மூக வலைத்தளங்களை பார்த்து தற்போதைய இளைஞர்கள் இளம் தலைமுறையினர் வெகுவாக கெட்டுப் போயிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏனென்றால் எதெல்லாம் செய்யக்கூடாதோ அதெல்லாம் செய்து கொண்டிருக்கின்றனர். வன்முறையை தூண்டும் விதமாகவும் கெட்ட பழக்கங்களையும் அதிகமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது அதைப் பற்றி போட்டோக்களும் விடீயோக்களும் வெளி வரத்தான் செய்கிறது.

சமூக வலைத்தள பக்கத்தில் லைக்ஸ்கள் வரவேண்டும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணிகின்றனர். ஆபத்தை உணராமல் ஒரு சில இடங்களுக்கு சென்று ரில்ஸ் எடுத்து உயிரை விட்டவர்களும் உண்டு. முந்தைய தலைமுறையினர் போல் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கு பயம் தற்போதையா இளம் தலைமுறையினருக்கு இல்லை. அதேபோல் ஏதாவது சொல்லிவிட்டால் போதும் உடனே தற்கொலை செய்து கொள்ளும் முடிவையும் எடுத்து விடுகிறார்கள்.

அப்படி ஏதாவது கண்டித்து விட்டால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பார்த்து கொஞ்சம் விட்டால் எதெல்லாம் செய்யக்கூடாத கெட்ட பழக்கங்கள் எல்லாம் அடிமையாகி விடுகின்றனர். இதில் ஆண்கள் பெண்கள் என விதிவிலக்கு அல்ல. பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் படிக்க வேண்டும் என்று தான் பெற்றோர்கள் அனுப்புகிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில் இருக்கும் மாணவ மாணவிகள் செய்யும் அட்டூழியத்துக்கும் அலப்பறைகளுக்கும் அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

அதுபோல ஒரு சம்பவம் தான் தற்போது நடந்து இருக்கிறது. கடலூர் பேருந்து நிலையத்தில் பள்ளி முடிந்த பின்பு பேருந்துருக்காக காத்திருந்த இரண்டு மாணவிகள் பொதுவெளியில் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. பள்ளி சீருடையில் அவர்கள் சிகரெட் பிடிப்பது போன்ற வீடியோவை பார்த்ததும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

No comments