தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை? நவம்பர் 1-ந் தேதி விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை:
நவம்பர் 1-ந் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறையை அரசு அறிவித்தால் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
அதனால், தீபாவளி பண்டிகையை நல்லமுறையில் கொண்டாடிவிட்டு, சொந்த ஊரில் 2 நாட்களை தனது குடும்பத்துடன் தங்கி இருந்து கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. ஆயுத பூஜை பண்டிகை முடிந்துள்ள நிலையில், இன்னும் 17 நாளில் தீபாவளி பண்டிகை வருகிறது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை தான் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும். அனைவருமே புத்தாடை எடுப்பார்கள். நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவார்கள். பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடி மகிழ்வார்கள். உறவினர்கள் இல்லங்களுக்கு என்றும், சுற்றுலா சென்றும் தீபாவளியை கொண்டாடி மகிழ்வார்கள்..
வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை என்பது நான்கு நாட்கள் பண்டிகையாகும். தமிழ்நாட்டில் தீபாவளிஅக்டோபர் 31ம் தேதி என்றால், வடமாநிலங்களில் நவம்பர் 1ம் தேதி தான் சிறப்பாக கொண்டாடப்படும். தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை, நோன்பு என்று மறுநாள் கொண்டாடுபவர்கள் தமிழ்நாட்டிலும் கணிசமாக உள்ளனர். பொதுவாக தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை தீபாவளி அன்று மட்டும் தான் அரசு விடுமுறை..
ஆனால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை, பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1-ந் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறையை அரசு அறிவித்தால் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதனால், தீபாவளி பண்டிகையை நல்லமுறையில் கொண்டாடிவிட்டு, சொந்த ஊரில் 2 நாட்களை தனது குடும்பத்துடன் தங்கி இருந்து கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் முதல்-அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: "தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு வருகிற 31-ந் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்த மறுநாள் நவம்பர் 1-ந் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. நவம்பர் 2 மற்றும் 3-ந் தேதி முறையே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு விடுமுறை நாட்களாக உள்ளது.
எனவே, நவம்பர் 1-ந் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறையை அரசு அறிவித்தால் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதனால், தீபாவளி பண்டிகையை நல்லமுறையில் கொண்டாடிவிட்டு, சொந்த ஊரில் 2 நாட்களை தனது குடும்பத்துடன் தங்கி இருந்து கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதோடு, பண்டிகை முடிந்து பணிபுரியும் இடத்திற்கு மீண்டும் செல்ல பஸ் வசதியும் எளிதாக கிடைக்கும். ஆகவே, நவம்பர் 1-ந் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுகிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments