Breaking News

ஊழியர்களுக்கு கார், பைக் பரிசு.. ஆயுத பூஜை விழாவில் அள்ளி கொடுத்த உரிமையாளர்! நம்ம சென்னையில் தான்

 


சென்னையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் ஆயுத பூஜை பண்டியையொட்டி தனது ஊழியர்களுக்கு ரூ.3.5 கோடி மதிப்பிலான 28 கார், 29 பைக்களை வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

உரிமையாளரின் இந்த செயலாளர் செயலால் ஊழியர்கள் அனைவரும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய்விட்டார்கள்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.. இந்த பண்டிகையின் போது மாணவர்கள் புத்தங்களை வைத்து சரஸ்வதி பூஜை செய்வார்கள்.

அதேபோல வேலைக்குச் செல்வோர் தங்கள் வேலை தொடர்புடைய விஷயங்களை வைத்து ஆயுத பூஜையைக் கொண்டாடுவார்கள். அப்படி தான் சென்னையில் தனியார் நிறுவனத்தில் நடந்த ஆயுத பூஜை விழாவில் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசு கிடைத்துள்ளது.

கார், பைக் பரிசு: அதாவது சென்னை செம்மஞ்சேரி, நாவலூரில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. அந்த தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது. ஈசிஆர் சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் இந்த ஆயுத பூஜை விழா நடைபெற்றது. அப்போது நிறுவனத்தின் உரிமையாளர் ஶ்ரீதர் கண்ணன் தனது ஊழியர்களுக்கு கார், பைக் எனறு பரிசுகளை அள்ளி கொடுத்து ஆச்சரியப்பட வைத்தார்.

இந்த தனியார் நிறுவனத்தில் 9 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வந்த 28 ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளார். அதேபோல அங்கு 7+ ஆண்டுகளாக வேலை செய்து வரும் 29 ஊழியர்களுக்கு பைக் பரிசாக வழங்கி இருக்கிறார். சரஸ்வதி பூஜை விழாவில் எதிர்பார்க்காத வகையில் கார், பைக் பரிசுகளாகக் கிடைத்தால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர்.

ஸ்ட்ரிக்ட் ஆர்டர்: கண்டிப்பாக குடும்பத்துடன் வர வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட உரிமையாளர், சர்ப்ரைசாக கார் மற்றும் பைக் வழங்கியுள்ளார். இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் ஶ்ரீதர் கூறுகையில், "2005ல் நாங்கள் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். அப்போது எங்கள் நிறுவனத்தில் 4 பேர் மட்டுமே இருந்தோம். ஆனால், இப்போது சுமார் 180 பேர் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். சென்னையிலேயே செம்மஞ்சேரி மற்றும் நாவலூர் என இரண்டு இடங்களில் நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.

இத்தனை ஆண்டுகளாக எனது நிறுவனத்திற்காக வேலை செய்த ஊழியர்களுக்குப் பரிசு தர விரும்பிய இதைச் செய்தார். 9+ ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் எல்லா ஊழியர்களுக்குக் காரை பரிசாகக் கொடுத்துள்ளார்.. அதேபோல 7+ நிறுவனத்தில் வேலை செய்தோருக்கு பைக் பரிசாக வழங்கியுள்ளேன். நான் முதலில் கார் வாங்கும் போது கூட எனக்கு இந்தளவுக்குச் சந்தோஷமாக இல்லை. ஆனால், இப்போது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

ரூ. 3.5 கோடி: ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கார்கள் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கார், பைக்களை வாங்கி கொடுத்துள்ளார் ஶ்ரீதர் கண்ணன்.. இது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. கோடிகளில் புரண்டாலும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் மனம் அவ்வளவு சீக்கிரம் பலருக்கு வராது. இதனால் பலரும் ஶ்ரீதர் கண்ணனை பாராட்டி வருகிறார்கள்.

No comments