Breaking News

மாற்றி யோசித்த சேலம் மாணவன்.. உருவான மிகப்பெரிய கண்டுபிடிப்பு.. 45 நிமிட தூரம் இப்போது 15 நிமிடம்

 


18 வயதிற்கு கீழ் இருந்ததால் பைக் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சின்னதாய் மாற்றி யோசித்த சேலம் ராமநாயக்கன் பாளையத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அபிஷேக், சாதாரண சைக்கிளில் 30.கி.மீ வேகத்திறன் கொண்ட பேட்டரியை பொருத்தியிருக்கிறார்.

தினமும் பள்ளிக்கு செல்ல 45 நிமிடங்களுக்கு மேல் ஆன பயண நேரம் தற்போது வெறும் 15 நிமிடமாக குறைந்துள்ளது.

சிறுவர்கள் பலருக்கும் பைக் ஓட்ட ஆசை இருக்கும். ஆனால் பைக் ஓட்ட வேண்டும் என்றால் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். 18 வயது வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியதால் பள்ளி மாணவன் ஒருவர், சைக்கிளில் சின்னதாய் ஒரு மாற்றம் செய்தார். இதன் மூலம் 45 நிமிட பயண தூரம் வெறும் 15 நிமிடமாக குறைந்துள்ளது. எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் சின்னதாய் மாற்றி யோசித்தால் தீர்வு உறுதி என்பது இந்த மாணவனின் கண்டுபிடிப்பு உதாரணமாகும்.

சேலம் ராமநாயக்கன்பாளையத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அபிஷேக் இதுபற்றி கூறுகையில், "என்னுடைய பள்ளிக்கு செல்ல வீட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தினமும் பயணிக்க வேண்டும்.. இதனால் அப்பாவிடம் நான் மோட்டார் சைக்கிள் வாங்கித்தருமாறு கேட்டேன்.. அரசின் ரூல்ஸ்படி, 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பைக் ஓட்டக்கூடாது.. அதேபோல் எங்கள் ஆசிரியர்களும், 18 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் பைக் ஓட்டக்கூடாது என்று சொன்னார்கள்..

இதனால் நான் சைக்கிள் வாங்கினேன்.. எங்கள் வீட்டில் மோட்டார் வேலை செய்வார்கள்.. அதனால் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் போது எனக்கும் ஒரு ஆர்வம் வந்தது.. நாம் ஏன் ஒரு எலக்ட்ரிக் சைக்கிள் தயாரிக்கக்கூடாது என்று யோசித்தேன்.. அதன்பிறகு சைக்கிளை தயாரித்தேன்..

இப்போது இருசக்கர வாகனத்தை நான் தயாரித்த பின்னர், நான தினமும் பள்ளிக்கு சென்று வரும் நேரம் குறைந்து விட்டது.. அதேபோல் நான் நன்றாக படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த சைக்கிளில் நான் பயன்படுத்தியுள்ள மோட்டார்.. 2800 ஆர்பிஎம், 24 வோல்டு, 250 வாட்ஸ் பயன்படுத்தி இருக்கிறேன்... நான் 11ம் வகுப்பு செல்லும் போது, சயின்ஸ் குரூப் எடுத்து படிப்பேன்... அதன் பின்னர் இதுபோல் பல அறிவியல் விஷயங்களை கண்டுபிடிப்பேன்..

நான் பழைய சைக்கினைத் தான் இப்படி பேட்டரி சைக்கிளாக தயாரித்துள்ளேன். மேலும் பேட்டரி , மோட்டார் மட்டுமே புதுசு.. மற்ற எல்லாமே பழைய பொருட்களை வைத்தே செய்வேன்.. ஹெட்லைட், பிரேக் லைட் போன்ற பல்வேறு விஷயங்களை வடிமைத்துள்ளேன்... இதனை 3 மணி நேரம் சார்ஜ் போட்டால் 30 கிலோ மீட்டர் பயணிக்க முடியும்.. இதற்கு ஒரு நாள் செலவு என்று பார்த்தால் வெறும் ஒரு ரூபாய் தான் ஆகும். இதனால் பெட்ரோல் பைக்குடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் எலக்ட்ரிக் சைக்கிள் பயனுள்ளதாக இருக்கும்" இவ்வாறு மாணவன் கூறினார்.

No comments