Breaking News

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை.. 499 பணியிடங்கள்.. எக்ஸாம் கிடையாது.. அப்ளை பண்ணுங்க

 


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம், கோவை உள்பட போக்குவரத்து கழக மண்டலங்களில் காலியாக உள்ள 499 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? என்பது உள்ளிட்டவை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் அரசு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகம் வாயிலாக இயக்கப்படுகிறது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான போக்குவரத்து கழகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து கழக மண்டலங்களில் உள்ள பேருந்துகளுக்கான டிரைவர் மற்றும் கண்டக்டர், டெக்னிக்கல் பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

டிரைவர், கண்டக்டர் பணிகளுக்கு அண்மையில் ஆட்சேர்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் டெக்னிக்கல் பணியிடங்களில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களும் நிரப்பப்படுவது வழக்கம். ஒப்பந்த அடிப்படையில் இந்த பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில்தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம், கோவை உள்பட போக்குவரத்து கழக மண்டலங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 499 பணியிடங்கள் நிரப்பபட இருக்கின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்: விழுப்புரம், கோவை, சேலம், திருநெல்வேலி (நாகர்கோவில் உள்பட), விரைவு போக்குவரத்து கழகம் - சென்னை ஆகிய மண்டலங்களில் மொத்தம் 499 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* இன்ஜினியரிங் (Apprentices) - 201

* மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - 170

* சிவில் இன்ஜினியரிங் - 10

* கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் - 12

* எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 9

* பட்டயப் பயிற்சி (Diploma) - 140

* மெக்கானிக்கல் / ஆட்டோ மொபைல் - 125

* சிவில் - 5

* கணினி அறிவியல் - 7

* எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் - 3

பட்டதாரி பயிற்சி (Graduate) - 158

* கோவை - 93

* நெல்லை- 53

* சென்னை - 22

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைவடைந்தவராகவும் 29 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 34 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 32 வயது வரையும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 39 வயது வரையும் விண்ணப்பிக்க முடியும். கல்வி தகுதி வயது வரம்பு ஆகியவை குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெளிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் என்ஜினியரிங் உள்ளிட்ட டிகிரி பிரிவு பணிகளுக்கு மாதம் ரூ.9 ஆயிரமும், டிப்ளமோ கல்வி தகுதி கொண்ட பயிற்சி பணிக்கு ரூ.8 ஆயிரமும் கிடைக்கும்.

தேர்வு முறை: தேர்வு எதுவும் கிடையாது. மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 21.10.2024 கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். www.nats.education.gov.in என்ற வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை, நிபந்தனைகள் உள்பட அனைத்து விவரங்களையும் தேர்வர்கள் இந்த அறிவிப்பில் https://boat-srp.com/wp-content/uploads/2024/09/TNSTC_REGION_NOTIFIATION.pdf தெரிந்து கொள்ளலாம்.

No comments