Breaking News

உங்க அக்கவுண்டிற்கு மாதந்தோறும் வரும் ரூ.5000.. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா.!!!

 


ந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

அதில் குறிப்பிடத்தக்கதானது *பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் யோஜனா*. இந்த திட்டம், நாடு முழுவதும் 500 முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும், இதில் ₹4500 ஒன்றிய அரசும் ₹500 சம்பந்தப்பட்ட நிறுவனமும் வழங்கும்.

இந்த திட்டம், நிதி அமைச்சரின் 2024 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன் முக்கிய இலக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. 2024-2025 நிதியாண்டில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு இந்த இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவது இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்.

இது 21 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மட்டுமே தகுதியுடையதாகும். மேலும், முழுநேர ஊழியராக பணியாற்றும் நபர்கள், ஐஐடி அல்லது ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள், மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் விண்ணப்பிக்க முடியாது.

12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ அல்லது பிஏ, பிகாம், பிஎஸ்சி போன்ற படிப்புகளை முடித்தவர்கள் www.pminternship.mca.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். *நவம்பர் 27* தேதிக்குள் தேர்வான பட்டியல் வெளியிடப்பட்டு, *டிசம்பர் 2* முதல் பயிற்சிகள் துவங்கப்படும்.

இந்த திட்டம், இந்தியாவின் இளைஞர்களுக்கு தொழில் திறன்களை மேம்படுத்துவதோடு, பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்யும்.

No comments