இந்த டிரிக் தெரிஞ்சா போதும் உங்க டிக்கெட் எப்பொழுதும் வெயிட்டிங் லிஸ்ட்லயே வராது
ரயில்வேயின் விகல்ப் திட்டம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டைப் பெற மற்றொரு ரயிலின் விருப்பத்தையும் தேர்வு செய்யலாம்.
நெடுந்தூர ரயில்களில் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டைப் பெறுவது எளிதான காரியம் அல்ல. குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, டிக்கெட் எடுப்பது கடினமான பணி. இந்த பிரச்சனைக்கு சில தீர்வுகளை வழங்க, ரயில்வேயின் விகல்ப் (VIKALP) திட்டம் உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது இந்திய ரயில்வே பயணிகளுக்கு விருப்பத் திட்டத்தை வழங்குகிறது. இது உறுதியான டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ரயில்வேயின் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வழங்கும் நோக்கத்துடன் இந்திய ரயில்வே 2015 இல் விகல்ப் திட்டத்தைத் தொடங்கியது. ரயில்வே மாற்று ரயில் மற்றும் தங்கும் இடம் திட்டத்திற்கு (ATAS) VIKALP என பெயரிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயணிகளுக்கு முடிந்தவரை உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை வழங்க ரயில்வே முயற்சிக்கிறது. இதன் கீழ், ஆன்லைனில் உங்கள் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் செல்லும் பட்சத்தில் அதே வழித்தடத்தில் செல்லும் மற்றொரு ரயிலில் நீங்கள் உங்கள் கன்பார்ம் டிக்கெட்டை பதிவு செய்து சிரமமின்றி பயணம் மேற்கொள்ளலாம்.
விகல்ப் திட்டத்தை எப்படி தேர்வு செய்வது
விகல்ப் திட்டம் பயணிகளுக்கு உறுதியான டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான
வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நீங்கள் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை
முன்பதிவு செய்யும் போது, VIKALP என்ற ஆப்ஷன் தானாகவே உங்களுக்கு
பரிந்துரைக்கப்படும். இந்த விருப்பத்தில், நீங்கள் பதிவு செய்த ரயிலில்
உங்கள் டிக்கெட் வெயிட்ங் லிஸ்டில் இருக்கும் பட்சத்தில் அதே வழித்தடத்தின்
மற்ற ரயில்களையும் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள்.
விகல்ப் திட்டத்தின் கீழ், ரயில்வே பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இதை தேர்வு செய்யலாம். ஏதேனும் மாற்று ரயிலில் இருக்கை அல்லது பெர்த் இருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ரயிலிலும் அவர்களுக்கு தானாகவே இருக்கை/பெர்த் ஒதுக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டின் ஹிஸ்ட்ரிக்குச் சென்று இந்த விருப்பத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.
No comments