8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.16) விடுமுறை! கனமழை காரணமாக அலுவலகங்களுக்கும் லீவ்!
சென்னை ,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு ,
திருவள்ளூர்,
இராணிப்பேட்டை,
சேலம்.
மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு
அதிகனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாளை (அக்டோபர் 16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
சென்னையில் இன்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி, கோடம்பாக்கம், வடபழனி, வள்ளுவர் கோட்டம், எழும்பூர், அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளையும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை: அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கவும், வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாலை 4 மணியுடன் விடுமுறை: அரசு அலுவலகங்களுக்கு இன்று மாலை 4 மணியுடன் விடுமுறை அறிவித்து தலைமைச் செயலர் ஆணை பிறப்பித்துள்ளார். கனமழை காரணமாக அலுவலக நேரம் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்துள்ளது.
அரசு அறிவிப்பு: இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாளை (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.
நாளை (அக்.16) மிக அதிகனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விடுமுறை: தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments