Breaking News

தமிழ்நாட்டில் இன்று இந்த 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. எங்கெல்லாம் தெரியுமா?

 


மிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை வெளுத்து வாங்கும் நிலையில், வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் கேள்வி.
இந்தியாவைப் பொருத்தவரையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காற்றுகள் மூலம் மழை கிடைத்து வருகிறது. இதில், தமிழ்நாட்டுக்கு வடகிழக்கு பருவமழை மூலமே அதிக மழை கிடைக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், இரு நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகும் என்றார். பொதுவாக, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20-ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 15-ஆம் தேதியே தொடங்குகிறது என்று பாலச்சந்திரன் கூறினார்.

சென்னையில் இன்று கனமழையும் 15, 16 ஆம் தேதிகளில் மிக கன மழையும் பெய்யும் என்றார். அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் இதுவரை தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 66 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது என்றார்.

மேலும், வானிலை மையத்தைப் பொருத்தவரையில் மிதமான மழை, கன மழை, மிக கன மழை என்று மட்டுமே கூற முடியும் என்ற பாலச்சந்திரன், எவ்வளவு சென்டி மீட்டர் மழை பெய்யும் என துல்லியமாக கூற முடியாது என்றார். இதனிடையே விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 உள் மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

: தவெக மாநாடு: 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் - விஜயின் அடுத்த மூவ்!

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல, திருச்சி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழையும் பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நாளை திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments