Breaking News

SBI பேங்கில் ரூ.8 லட்சம் பிக்சட் டெபாசிட்டுக்கு எவ்வளவு லாபம்? மூத்த குடிமக்களுக்கு செம வாய்ப்பு!

 


ல்வேறு வங்கிகளும் தற்போது சிறப்பு பிக்சட் டெபாசிட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் சிறப்பு பிக்சட் டெபாசிட்களை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக வங்கிகளில் வழங்கப்படும் 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பிக்சட் டெபாசிட்களை விட 444 நாட்கள் கொண்ட அம்ரித் விருஷ்டி, அம்ரித் கலாஷ், சர்வோத்தம் போன்ற பிக்சட் டெபாசிட்களையும் வங்கிகள் வழங்குகிறது.இந்த திட்டங்களுக்கு வழக்கத்தை விட அதிக வருமானம் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் பொதுவாக தங்கள் முதலீடுகளில் மிகவும் பழமைவாதிகளாக இருப்பார்கள். அதிக ஆபத்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை விட உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் முதலீடுகளிலேயே அதிகம் பயன் பெறுவார்கள்.

எஸ்பிஐ வழங்கும் இந்த பிக்சட் டெபாசிட்கள் இவர்களுடைய தேவையை சரியாகப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மூத்த குடிமக்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் தேவை என்பதை உணர்ந்து, பொது வைப்பாளர்களுடன் ஒப்பிடும்போது SBI அவர்களுக்கு மிகவும் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.SBI மூத்த குடிமக்கள் FD-களுக்கான தற்போதைய வட்டி விகிதங்கள்: அக்டோபர் 2024 நிலவரப்படி, மூத்த குடிமக்களுக்கு SBI பின்வரும் வட்டி விகிதங்களை வழங்குகிறதுஅம்ரித் விருஷ்டி FD: 7.75%1 ஆண்டு FD: 7.30%3 ஆண்டு FD: 7.25%5 ஆண்டு FD: 7.50%அம்ரித் விருஷ்டி திட்டம் மிக உயர்ந்த வட்டி விகிதத்துடன் தனித்து நிற்கிறது. குறுகிய காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது ஒரு நல்ல விருப்பமாக இருக்கும்.எஸ்பிஐ வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ரூ.8 லட்சம் மற்றும் ரூ.15 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போம்.அம்ரித் விருஷ்டி மூத்த குடிமக்கள் FD: இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ரூ.8 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 444 நாட்கள் கழித்து 7.75% வட்டி விகிதத்தில் 78,296.34 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் விளைவாக மொத்த முதிர்வுத் தொகை ரூ.8,78,296.34-ஆக இருக்கும்.ரூ.15 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 444 நாட்கள் கழித்து 7.75% வட்டி விகிதத்தில் 1,46,805.63 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை ரூ.16,46,805.63-ஆக இருக்கும்.1 ஆண்டு SBI மூத்த குடிமக்கள் FD: இந்தத் திட்டத்தில் ரூ. 8 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் 7.30 சதவீத வட்டி விகிதத்தில், 60,018 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 8,60,018 ரூபாயாக இருக்கும்.1 ஆண்டு SBI மூத்த குடிமக்கள் FD திட்டத்தில் ரூ.

15 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் 7.30 சதவீத வட்டி விகிதத்தில், 1,12,534 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 6,12,534 ரூபாயாக இருக்கும்.3 ஆண்டு SBI மூத்த குடிமக்கள் FD: இந்தத் திட்டத்தில் ரூ. 8 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் 7.25 சதவீத வட்டி விகிதத்தில், 1,92,438 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 9,92,438 ரூபாயாக இருக்கும்.3 ஆண்டு SBI மூத்த குடிமக்கள் FD திட்டத்தில் ரூ.

15 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் 7.25 சதவீத வட்டி விகிதத்தில், 3,60,820 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 18,60,820 ரூபாயாக இருக்கும்.5 ஆண்டு SBI மூத்த குடிமக்கள் FD: இந்தத் திட்டத்தில் ரூ. 15 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் 7.50 சதவீத வட்டி விகிதத்தில், 6,74,922 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 21,74,922 ரூபாயாக இருக்கும்.1961-இன் வருமான வரிச் சட்டம் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளை வழங்குவதால், 5 ஆண்டு கால FD இல் முதலீடு செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

No comments