Breaking News

Ayudha Puja 2024: ஆயுத பூஜை 2024; நல்ல நேரம், வழிபாட்டு முறைகள் குறித்த முழு விவரம் உள்ளே..!

 


க்டோபர் 09, சென்னை (Festival News): ஆயுத பூஜை (Ayudha Puja) என்பது ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் 9-வது நாளில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான இந்து பண்டிகையாகும்.

இது அஸ்திர பூஜை (Astra Puja) என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விழா ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளாவில் ஆயுதபூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. வடகிழக்கில் மகா நவமி (Maha Navami) என்று அழைக்கப்படுகின்றது. ஒடிசாவில் அஸ்திர பூஜையாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் தசராவின் 9-வது நாளில் அனுசரிக்கப்படுகின்றது.

ஆயுத பூஜை 2024:

மகிஷாசுரனை வதம் செய்வதற்காக கடும் தவம் இருந்து, ஒவ்வொரு தெய்வங்களிடம் இருந்து பராசக்தி ஒவ்வொரு விதமான சக்தி வாய்ந்த ஆயுதங்களை பெற்றாள். இந்தப் போரின் இறுதி நாளில், போர்க்களத்திற்கு புறப்படுவதற்கு தெய்வங்களிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை வைத்து, பராசக்தி பூஜை செய்து வழிபடுகிறாள். தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக பராசக்தி ஆயுதங்களை வைத்து வழிபட்ட இந்த நாளையே நாம் ஆயுத பூஜையாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் நாமும் நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, நம் வாழ்வில் பயன்படக்கூடிய பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும். 

ஆயுத பூஜை 2024 நாள்:

நவராத்திரியின் நிறைவு நாளும், ஒன்பதாவது நாளுமான அக்டோபர் 11-ஆம் தேதி இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வருகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாளை சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம். இது ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகின்றது. சரஸ்வதி பூஜை (Saraswati Puja) மற்றும் ஆயுத பூஜை இந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

வழிபாட்டு முறை:

நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் அனைத்து வகையான கருவிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள் இதுவாகும். திருவிழா நாளில் வழிபடப்படும் சிறிய கருவிகள் உட்பட வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற பெரிய பொருட்களும் இருக்கும். ஆயுதபூஜை அன்று கருவிகளை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. ஆயுதபூஜை என்பது பாவங்களை வென்றெடுக்கும் விழாவாக கருதப்படுகிறது. அன்றைய தினம் கருவிகள் மற்றும் வாகனங்களை கழுவி பின்னர் வணங்குகிறார்கள். வியாபாரிகளும் தங்கள் கடைகளை சுத்தம் செய்து பூஜை செய்கின்றனர்.

நல்ல நேரம்:

இந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி ஆயுத பூஜை நாளில் மதியம் 12.15 முதல் மதியம் 01.15 வரை நல்ல நேரம் ஆகும். மேலும், மாலை 04.45 முதல் மாலை 05.45 வரை நல்ல நேரம் உள்ளது.

No comments