Breaking News

உங்கட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கா? அப்போ இந்த 11 கீபோர்ட் ஷார்ட்கட் தெரிஞ்சுக்கோங்க.. வேற லெவல் அனுபவம்..

 


ங்களிடம் லேப்டாப் (Laptop), கம்ப்யூட்டர் (Computer) என்ற ஏதேனும் ஒரு சாதனம் இருந்தால் கூட, கட்டாயம் இந்த முக்கியமான 11 கீபோர்ட் ஷார்ட்கட் கீஸ் (Important 11 Keyboard Shortcut Keys) கண்ட்ரோலை நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த 11 கீபோர்ட் ஷார்ட்கட் கீ கண்ட்ரோல் உங்கள் ஒட்டுமொத்த லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் அனுபவத்தையே மேம்படுத்தி மாற்றிவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே, இந்த 11 ஷார்ட்கேட் கீ கண்ட்ரோலில் ஏதேனும் ஒன்றாவது உங்களுக்கு கட்டாயம் தேவைப்படும். சரி வாருங்கள் புதிய விஷயத்தை கற்றுக்கொள்ளலாம்.

பொதுவாகவே லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் எல்லா மக்களும் Ctrl + A, Ctrl + V மற்றும் Ctrl + C போன்ற ஷார்ட்கட் கீஸ்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவார்கள். இதில் Ctrl + A என்ற ஷார்ட்கட் கீஸ் செலக்ட் ஆள் (Select All) அம்சத்தை இயக்குகிறது. Ctrl + C ஷார்ட்கட் கீஸ் காப்பி (Copy) செய்ய அனுமதிக்கிறது.

அதேபோல், Ctrl + V ஷார்ட்கட் கீ காப்பி செய்த தகவல்களை பேஸ்ட் (Paste) செய்ய அனுமதிக்கிறது. இந்த மூன்று ஷார்ட்கட் கீஸ்களை தான் தினசரி பெரும்பாலான லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் பயனர்கள் பயன்படுத்துகிறார்கள். இதை தாண்டி, இன்னும் பல முக்கியமான ஷார்ட்கட் கீஸ்கள் உங்கள் தினசரி கணினி அனுபவத்தை மாற்றம் செய்யும் திறனுடன் செயல்படுகின்றன. ஆனால், இதை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.

அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். உலகளவில் மிக முக்கியமான ஷார்ட்கட் கீஸ் என்று கருதப்படும் 11 விதமான ஷார்ட்கட் கீ கண்ட்ரோல் காம்பினேஷனை தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

1. ஸ்னிப்பிங் டூல் (Snipping Tool):

Windows key (மைக்ரோசாப்ட் விண்டோ லோகோவுடன் காணப்படும் கீபோர்ட் கீ) + Shift + S பிரஸ் செய்தால் ஸ்னிப்பிங் டூல் ஆக்டிவேட் செய்யப்படும். இது உங்கள் டிஸ்பிளேவில் உள்ள தகவல்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்க அனுமதிக்கிறது.

2. ஹைடு ஆள் விண்டோஸ் (Hide All Windows):

Windows key + D பிரஸ் செய்தால், திறந்திருக்கும் அணைத்து விண்டோஸ்களும் மறைக்கப்பட்டு டெஸ்க்டாப் மட்டும் காண்பிக்கப்படும்.

3. லான்ச் டாஸ்க் மேனேஜர் (Launch Task Manager):

ஏதேனும் ஆப்ஸ் ஹேங் ஆகிவிட்டாலோ அல்லது அணுக முடியாமல் டிஸ்பிளே உறைந்துவிட்டாலோ Ctrl + Shift + Esc கீஸ் பிரஸ் செய்யுங்கள். இதில் அதிகமான CPU பயன்படுத்தும் ஆப்ஸை கிளிக் செய்து END கொடுத்தால் ஹேங்கிங் சிக்கல் தீர்க்கப்படும்.

4. லான்ச் கோபைலட் (Launch Copilot):

Windows key + C பிரஸ் செய்தால் கோபைலட் உடனே ஆக்டிவேட் செய்யப்படும். Copilot அம்சத்தை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்தது.

5. பிரௌஸர் டேப்ஸ் நடுவே மாற (Jump between browser tabs):

Ctrl +Tab பிரஸ் செய்தால் கிளாக்வைஸ் ஜம்பிங் மூலம் பிரௌசர் டேப்ஸ் மாற்றப்படும். Ctrl + Shift + Tab பிரஸ் செய்தால், ஆண்டிகிளாக்வைஸ் ஜம்ப் மூலம் பிரௌஸர் டேப்ஸ் மாற்றப்படும்.

6. பெர்மனெண்ட் டெலீட் (Permanently delete a file):

Shift + Delete கீஸ் பிரஸ் செய்தால், ரீசைக்கிள் பின் செல்லாமல் நேரடியாக பைல்கள் டெலீட் செய்யப்படும்.

7. ஆண்டு ஆக்க்ஷன் (Undo an action):

Ctrl + Z கீஸ் பிரஸ் செய்தால், நீங்கள் தவறுதலாக டெலீட் அல்லது கோப்பி பேஸ்ட் செய்த விஷயங்களை ரீவைண்ட் செய்து ஒரு ஸ்டெப் இருந்தது போல பின்னோக்கி சென்று திருத்திக்கொள்ளலாம்.

8. லேப்டாப் லாக் அல்லது கம்ப்யூட்டர் லாக் (Lock Your Laptop or Computer):

Windows key + L கீஸ் பிரஸ் செய்து, உங்கள் விண்டோவை நொடியில் லாக் செய்துகொள்ளலாம். மீண்டும் பாஸ்வோர்ட்யிட்டு ஓபன் செய்துகொள்ளலாம்.

9. இமோஜி மெனு (Emoji menu):

நீங்கள் டைப்பிங் செய்யும் பொழுது Emoji இணைக்க விரும்பினால், Windows key + . (டாட்) கீஸ்களை பிரஸ் செய்யவும்.

10. விண்டோஸ் தகவல் (See all Windows):

Windows key + Tab பிரஸ் செய்வதன் மூலம் உங்கள் கணினியில் எத்தனை விண்டோஸ் ஓபன் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

11. ஆக்டிவேட் ஸ்டிக்கி கீஸ் (Activate Sticky keys):

Shift கீயை 5 முறை தொடர்ச்சியாக பிரஸ் செய்தால், ஸ்டிக்கி கீ மோட் ஆக்டிவேட் செய்யப்படும். இதன் பிறகு தொடர்ச்சியான இரண்டு கீ அல்லது மூன்று கீகளை ஒன்றின் பின் ஒன்றாக பிரஸ் செய்து, ஷார்ட்காட் அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த 11 முக்கியமான விண்டோஸ் ஷார்ட்கட் கீபோர்ட் கீஸ் காம்பினேஷனை தெரிந்து வைத்துக்கொண்டால், உங்கள் ஒட்டுமொத்த லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் கணினி அனுபவம் வேற லெவலுக்கு மாறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. உடனே இன்றே இந்த கீபோர்ட் ஷார்ட்கட் கீஸ் காம்பினேஷன்களை ட்ரை செய்து பாருங்கள்.

No comments