தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு. உடனே இந்த வேலையை முடிங்க. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!!
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதாவது பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின் இணைப்புகளை உடனடியாக
சரி செய்வதோடு மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும். திறந்தவெளி
கால்வாய்களை தூர்வாரி மூட வேண்டும். பழுதடைந்த சுற்று சுவர்க்களை சுற்றி
வேலி அமைத்து தடுப்பு உருவாக்கி பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும்.
மழைக்காலத்தில் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் பாதிப்படைந்தால் அதனை
பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் உள்ள
நீர்நிலைகள், தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள், திறந்த நிலை கிணறுகள்
போன்றவைகள் மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மழைக்காலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பள்ளி
நேரத்தில் வகுப்பறையை விட்டு மாணவர்கள் வெளியேறக்கூடாது. அதோடு வெள்ளத்தை
வேடிக்கை பார்க்கவும் மாணவர்கள் செல்லக்கூடாது. மேலும் மாணவர்களுக்கு
அவர்கள் வசிக்கும் பகுதியில் நீர் தேங்கினால் கொசுக்களால் நோய் பரவும்
என்பதை எடுத்துரைப்பதோடு தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும் என்பது குறித்தும்
அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments