இனி அரை மணி நேரத்தில் நீரிழிவு நோய் சரியாகும்.. அசத்தலான கண்டுபிடிப்பை நிரூபிச்சு காட்டிய சீனா..!!
சீன மருத்துவர்களின் அண்மைய கண்டுபிடிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அரை மணி நேரத்தில் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை மூலம், நீரிழிவு நோய் முழுமையாக குணமாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த புதிய சிகிச்சை முறையில், நோயாளியின் உடலில் இருந்து சிறிதளவு திசுக்கள் எடுத்து, சில ரசாயன திருத்தங்களைச் செய்த பிறகு, மீண்டும் உடலில் செலுத்தப்படுகிறது.
ஷாங்காயில் உள்ள சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி இதை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. 25 வயது பெண் நோயாளிக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டதில், அவருக்கு இன்சுலின் ஊசி தேவையின்றி சர்க்கரை நிலை சீராகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சிகிச்சை டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கிறது. சீனாவின் மேம்பட்ட மருத்துவ சாதனைகள் இந்த நோயின் எதிர்கால சிகிச்சை முறைகளை மேலும் மாற்றும் என்ற நிலைப்பாட்டை வெளியிடுகிறது.
No comments