Breaking News

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அரையாண்டு விடுமுறை அறிவிப்பு.. இந்தமுறை எத்தனை நாள் லீவ் தெரியுமா?

 


மிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் அதிக பள்ளி நாட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தற்போது பள்ளி வேலை நாட்கள் குறைத்து திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 2024-25 கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலைநாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை குறித்து வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

மேலும் இத்துடன் அரையாண்டு தேர்வு நடைபெறும் தேதி, அரையாண்டு விடுமுறை நாட்கள் மற்றும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எந்த தேதியில் தொடங்கி எந்த தேதி வரை நடைபெறும், செய்முறை தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அட்டவணையை வரும் அக்டோபர் 14ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோவையிலிருந்து வெளியிட போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், "மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கிய ஆலோசனையின்படி, வரும் திங்கள்கிழமை (14.10.2024) அன்று இந்தக் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

No comments